தேசிய கொடியை எரித்தவன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் போட்ட உறவினர்கள் அதிர்ந்து போன காவல்துறை !!!

கோவையில் ஈ வே ரா சிலை மீது காவி சாயம் ஊற்றிய 21 வயது இளைஞர் அருண் மீது கோவை மாநகர ஆணையர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார், இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.

Loading...

வழக்கமாக தீவிரவாதிகள், தொடர்ந்து தேசத்தின் அமைதிக்கு எதிராக ஈடுபடுபவர்கள் மீது தான் இந்த சட்டம் பதியப்படும், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கருப்பர் கூட்டம் அமைப்பு இந்து கடவுள்களை அவமான படுத்தி 500 வீடியோக்கள் வெளியிட்டு இருந்த சூழலில் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் ஈ வே ரா சிலையில் காவி சாயம் பூசினேன் என தானாக முன்வந்து சரணடைந்த அருண் மீது இந்த அரசு NSA சட்டத்தை பயன்படுத்தியதை பலரும் கண்டித்து வருகிறார்கள், இந்த சூழலில் அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக கோவையில் பல இடங்களில் போராட்டம் வெடித்து வருகிறது.

Loading...

குறிப்பாக பெரும் அளவில் இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர், இந்த சூழலில் அருணின் உறவினர்கள் போராட்டத்தின் போது அருண் இந்நேரம் இந்து கடவுள் சிலைகளை உடைத்து இருந்தால் அவனுக்கு கையில் காசு கொடுத்து இந்த அரசாங்கம் அனுப்பியிருக்கும் ஆனால் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதால் அவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துவிட்டார்கள்.

இந்த அரசாங்கம் யாருக்கான அரசாங்கம் தொடர்ந்து இந்து மதத்தை அவமானப்படுத்துவர்களுக்கு அவர்கள் வழியில் பதில் சொன்னால் எங்களை மட்டும் அடக்குகிறார்கள், கோவையில் CAA போராட்டத்தின் போது எத்தனை பொது சொத்துக்கள், காவலர்கள் தாக்க பட்டார்கள் அவர்கள் மீது ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம் பதிவு செய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் இந்திய தேசிய கொடியை எரித்தவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை

உடனடியாக அருணை தேசிய பாதுகாப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், இந்துகளின் ஒற்றுமை மலையை விட வலிமையானது அதிலும் கோவையில் எங்களை பொறுமை இழக்க செய்யவேண்டாம் எனவும் கொந்தளித்துள்ளனர், மேலும் சிவகுமார் என்பவர் கூறுகையில் மைத்துனர் அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது சரி என்றால், தொடர்ந்து இந்து கடவுள்கள் நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வரும்..,

வீரமணி, திருமாவளவன், சுந்தரவள்ளி, இன்னும் பலரை இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்காதது ஏன், யாரையோ சமாதான படுத்த தமிழக அரசு இந்த செயலில் இறங்கி இருக்கிறது, இளைஞர்கள் மற்றும் இந்து அமைப்பு ஆர்வலர்கள் அருணை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் குனியமுத்தூர் காவல்துறை.அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேசிய கொடியை எரித்தவன் மீது எப்போது தேச பாதுகாப்பு சட்டம் பாயும் என கேள்வி எழுப்பி வருவதால் எந்த பதிலும் சொல்லமுடியாமல் காவல்துறையினர் அமைதியாகி இருக்கின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3950 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*