கோவை சிறையில் நடக்கும் கொடுமையான சம்பவம் வெளியிட்ட இந்து முன்னணி

கோவை சிறையில் நடக்கும் கொடுமையான சம்பவம் வெளியிட்ட இந்து முன்னணி

Loading...

கோவை மத்திய சிறையில் இந்து கைதிகள் கொடுமைக்கு உள்ளாவது குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதில் பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தற்போது கொரோனா
காரணமாக144 லாக்டவுன் அமல்படுத்ப்பட்டுள்ள நிலையில்சிறையில் சிறைவாசிகளை சந்திக்கும் நேர்காணல் மனு
வழக்கறிஞர்கள் நேர்காணல் தடைசெய்யப்பட்டுள்ளது.

Loading...

குடும்பத்தினரை
காணமுடியாத சூழ்நிலையில் சிறைவாசிகள் மன அழுத்தத்தால்
பாதிக்கப்படுவது இயல்பு.இத்தகைய நேரத்தில் சிறைவிதிகளுக்கு உட்பட்டு
அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின் கடமை.அதற்கு நேர்மாறாக மனு
இல்லாத காரணத்தினால் சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் இந்து சிறைவாசிகளை கொடுமைப்படுத்துவதும் தனிமைச்சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக இருந்தது. சிறைத்துறை
அதிகாரிகளிடம் இந்துமுன்னணி
பேச்சுவார்த்தை நடத்தி இந்து
கைதிகளுக்கு பாதுகாப்பை
ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை முஸ்லீம் சிறைவாசிகளுக்கு செய்து தந்த செளகரியங்கள் ஏராளம் ஒன்று சேர்ந்து
தொழுக அனுமதிப்பது மேலும் ரம்ஜான் காலங்களில் பிரியாணி செய்ய அனுமதிப்பது என தாராளம் காட்டியது.
இந்து சிறைவாசிகள் சிறையில்
பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்குதடை
விதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அனிய அனுமதிக்கும் சிறை
நிர்வாகம் காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள்
சார்பில் தீபாவளி பண்டிகைக்கு
ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு
அனுமதிக்க மறுத்தது அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .மேலும் கைது
செய்யப்பட்டு சிறைக்கு செல்லும்
சிறைவாசிகளை சோதனை செய்யும்
அறையில் வைத்து சிறைக்காவலர்கள்
காணிக்கை வார்டன்கள்
கடுமையாக தாக்குவது என பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம்.

சென்ற மாதம்கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் #ஆனந்த் மற்றும் RSS நிர்வாகி #சூரி ஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம் சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க சலுகை வழங்குகிறது சிறைத்துறை .

கடந்தமாதம் கைது செய்து
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை தனிமை சிறையில் அடைத்து வைத்து
கொடுமை செய்து மனித உரிமை
மீறலில் ஈடுபடுகிறது எனவே
கோவை மத்திய சிறையில் நடைபெறும்
மதரீதியான பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும் சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக விரைவில் இந்து முன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து கொள்கிறோம்.சிறைத்துறை
வார்டன் பூபால் அவர்கள்
முஸ்லீம்களால் தாக்கப்பட்ட போது
கண்டனக்குரல் கொடுத்து சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம்
இந்துமுன்னணி இதையெல்லாம்
மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென
இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*