Connect with us

#24 Exclusive

வரும் புத்தாண்டில் ’விக்ரம் 58’ படத்தின் டைட்டில் ரிலீஸ்?

விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

விக்ரமின் 58-வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு அமர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த வதந்திக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததோடு இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக வரும் ஜனவரியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர்

Loading...

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’கோப்ரா’ என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டைட்டிலாவது உண்மையா? என்பதை அதிகாரபூர்வமாக டைட்டில் வெளிவந்த பின்னரே தெரியவரும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending