Connect with us

#24 Exclusive

விக்ரம் ரசிகர்கள் கொண்டாடும் ‘கோப்ரா’ அறிவிப்பு

முதல் முறையாக விக்ரம் 12 வேடங்களில் நடித்து வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் நடித்துவரும் 12 கெட்டப்புகளும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பர்ஸ்ட் லூக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து ஏற்கனவே தகவல் வந்தது

இதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் ,முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்று கூறப்படுகிறது.

Loading...
Loading...

Trending