Connect with us

#24 Exclusive

இப்போ தெரிகிறதா குடியுரிமை சட்டம் திருத்தம் ஏன் என்று மாஸ் காட்டிய மோடி ! அடங்கிய போராளிகள்

மோடி அரசு ஏன் குடியுரிமை சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றியது என்பது குறித்து விஜயகுமார் அவர்கள் பதிவு ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதன் தகவல்கள் பின்வருமாறு :-

மோடி அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துஇருக்காது என்று நிச்சயமாக நம்பலாம். இது ஒரு நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட தொலை நோக்கு திட்டமாகும் மோடி அரசு 2014 ல்ஆட்சிக்கு வந்தவுடனே ஆரம்பமாகி விட்டது.40 ஆண்டுகளாக நிலவி வந்த இந்திய வங்கதேச எல்லைப் பிரச்சனையை விட்டுக்கொடுத்து மோடி முடித்து வைத்தாரோஅப்போதே புதிய குடியுரிமை சட்டத்திற்குஆரம்ப புள்ளியை வைத்து விட்டார்கள்.அந்த புள்ளியின் முடிவு வட கிழக்கு மாநிலங்களில் வங்க தேச இந்துக்கள் குடியேற்றத்தில் தான் வந்து முடியப்போகிறது.

வங்கதேச அரசு இப்பொழுது இந்தியாவில்
உள்ள வங்கதேச குடிமக்களை சட்ட ரீதியாக
குடியேறியவர்கள் என்று நிரூபித்தால் அவர்களை திருப்பி அழைத்து கொள்வோம் என்று அறிவித்து உள்ளது. அதோடு ரோஹின்யா முஸ்லிம்களை வங்கதேச அரசே நேசனல் த்ரெட் என்ற அறிவிக்கிறது. இதெல்லாம்
இந்தியா வில் உள்ள வங்கதேச முஸ்லிம்களை இந்தியா திருப்பி அனுப்ப முற்ப்பட்டால் அதை வங்கதேச அரசு எதிர்க்காது என்பதன் அர்த்தமே.

Loading...

வங்கதேசம் இந்தியாவோடு நீண்ட எல்லைகளை மட்டும் அல்ல நீண்ட கால உறவையும் வைத்துள்ளது. அந்த உறவு நிலைக்க வேண்டும் என்பதற்காகவே 2015 ம் ஆண்டில் மோடி வங்கதேசம் சென்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஒரு வரலாற்று சிறப்புமிக்க
ஒப்பந்தத்தை நிறைவேற்றினார்.
அதன் படி சுமார் 40 ஆண்டுகளாக வங்கதேசம் சுதந்திரம் அடைந்த 1971 ல் இருந்து இந்தியாவோடு வங்கதேசத்திற்கு இருந்து வந்த எல்லை பிரச்சனை தீர்க்கப்பட்டது. இதன்படி 17,160 ஏக்கர் பரப்பளவில் உள்ள 111 பகுதி களை வங்காளதேசத்திற்கு இந்தியாவும், 7,110 ஏக்கர் பரப்பளவில் உள்ள 51 பகுதிகளை இந்தியாவுக்கு வங்கதேசமும் ஒப்படை த்தது.

Loading...

வெளிப்பார்வைக்கு இந்தியா நிறைய நிலப்பரப்புகளை வங்கதேசத்திற்கு விட்டு கொடுத்தது மாதிரி தான் தோன்றும். ஆனால் அதன் பின்னணியில் வங்கதேச முஸ்லிம்களை மறுபடியும் வங்கதேசம் எடுத்து கொள்ள வேண்டு ம் என்பதே மறைமுக ஒப்பந்தமாகும்.இந்தியாவில் உள்ள வங்கதேச முஸ்லிம்களை திருப்பி அனுப்பும் போது வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் அப்பொழுது இரண்டு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தின் படி செயல் பட வாய்ப்புகள் உள்ளது. வங்கதேசத்தில் உள்ள
இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு இந்தியாவில் உள்ள வங்கதேச முஸ்லிம்களை பெற்று கொள்ள வங்கதேச அரசு முன் வரலாம்.

இதைத்தான் இந்திய அரசும் விரும்புகிறது.
அப்படி வரும் வங்கதேச இந்துக்களையும்
இப்பொழுது அகதிகள் முகாமில் உள்ள பாகிஸ்தான் வங்கதேச இந்துக்களை வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் குறைவாக உள்ள மிசோரம் மேகாலயா நாகலாந்து மாநிலங்களில் குடியமர்த்தவே விரும்பும்.அப்பொழுது தான் வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர் ஆதிக்கம் குறைந்து அங்கு தனி நாடு போராட்டங்கள் மறையும். இப்பொழுது அஸ்ஸாம் திரிபுரா சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் மெஜாரிட்டி. அருணாசல பிரதேசம் மணிப்பூர் மாநிலங்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சம அளவில் இருப்பதால் பிரச்சனைகள் இல்லை.

ஆனால் மிசோரம் நாகலாந்து மேகாலயா மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். இதனால் வங்கதேசத்து இந்துக்களை இந்த மூன்று மாநிலங்களிலும் குடி அமர்த்த வேண்டும்.இது மட்டும் நிகழ்ந்து விட்டால் இந்தியாவில் தனிநாடு பிரிவினை என்கிற பேச்சே வரமுடியாது. அதோடு வட கிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாதம் முற்றிலும் ஒடுங்கி விடும். அதோடு அரசியல் ரீதியாக பிஜேபி வட கிழக்கு மாநிலங்களில் அனைத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடும்.

எப்படி வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ
மதத்தை பரவ வைத்து அந்த மாநிலங்களை காங்கிரஸ் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததோ அதே மாதிரி பிஜேபி
அரசு வங்கதேச இந்துக்களை அந்த மாநிலங்களில் குடியமர்த்தி இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வங்கதேச முஸ்லிம்களை அவர்கள் நாட்டுக்கே இந்தியா திருப்பி அனுப்பிவிடும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு பிறகு வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களை வட கிழக்கு மாநிலங்களில் குடி அமர்த்தும் பணி ஆரம்பமாகலாம்..அதனால் வடகிழக்கு மாநிலங்களில் வசந்தம் உண்டாகி பிஜேபியின் தலைமையில் அனைத்து மாநில அரசுகளும் இயங்கும் என்றே எதிர் பார்க்கலாம். இவ்வாறு தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின்னால் இத்தனை பின்னூட்டங்கள் இருக்கிறதா?

Loading...

Trending