மனசாட்சியை தொட்டு சொல்கிறேன் நீட் தேர்வால் தகுதியான மாணவர்கள் உருவாகிறார்கள் நடிகர் சின்னிஜெயந்த்

மனசாட்சியை தொட்டு சொல்கிறேன் நீட் தேர்வால் தகுதியான மாணவர்கள் உருவாகிறார்கள்  நடிகர் சின்னிஜெயந்த்

நடிகர்கள் அனைவரும் நீட் தேர்வு குறித்து பலரும் பலவிதமாக கருத்து சொல்ல நடிகர் சின்னி ஜெயந்த் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவத் துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் 32 கோடி பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 28 லட்சம் பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கொடிய நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலை குறித்த உலக விழிப்புணர்வு தினம் வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த், செயலியை அறிமுகம் செய்து வைத்தார். குடல், கல்லீரல், இரைப்பையுடன் தொடர்புடைய மஞ்சள் காமாலையின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன.

Loading...

செயலியை அறிமுகம் செய்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்னிஜெயந்த், நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசினார். நீட் தேர்வினால் தகுதியான மருத்துவர்கள் கிடைப்பதாகவும் பணம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே மருத்துவர் ஆகமுடியும் என்று தெரிவித்தார், மனசாட்சியை தொட்டு சொல்கிறேன் நீட் தேர்வு தேவை அது ஏழை மாணவர்களை உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.

Loading...

சின்னி ஜெயந்தின் வெளிப்படையான கருத்து வரவேற்பை பெற்றுள்ளது.

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *