இந்தியாவை பார்த்து சட்டத்தை மாற்றிய சீன அதிபர் ! உலகம் முழுவதும் பரவிய இந்தியாவின் புகழ் !!!

தமிழகத்தை சேர்ந்த சினிமா துறையினர், ஊடகத்தில் பணிபுரிவோர் போன்றோர் எப்போதும் இந்தியாவை குறைத்து மதிப்பிட்டும், குற்றம் சுமத்தியும் மற்ற நாடுகளை உயர்த்தி பேசியும் இருந்து வரும் நிலையில் சீனாவில் நடந்த சம்பவம் இந்தியர்கள் புகழை உயர்த்தியுள்ளது.

Loading...

சீனாவில் வெளியான DYING TO SURVIVE என்ற திரைப்படம்தான் இவை அனைத்திற்கும் காரணம் இதில் வரும் காட்சிகள் பின்வருமாறு :- சீனாவில் ஒரு நகரத்தில் ஒரு சீன இளைஞர் ஆயுர்வேத மூலிகை மருந்து கடை ஒன்று நடத்தி வருகிறார். அந்த கடையில் இருக்கும் பெரும்பாலான மூலிகைகள் சீன மூலிகைகளை விட குறைந்த விலையில் இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்து ரொம்ப நாட்களாக விற்பனை செய்கிறார்.

ஒரு நாள் ஒரு மாஸ்க் அணிந்த ஒரு நபர் அந்த கடைக்கு வந்து அந்த இளைஞரிடம் “தம்பி… நான் ஒரு கேன்சர் நோயாளி. நான் உயிர் வாழ தொடர்ந்து ஒரு மாத்திரையை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அது நமது சீனாவில் மிகக்கடுமையான விலையில் இருக்கிறது அந்த மாத்திரை. எளியவர்கள் வாங்கி சாப்பிடவே முடியாது. இதனால் நிறைய பேர் இறந்து போகிறார்கள்.

Loading...

நான் உலகெங்கும் விசாரித்த வரை அதே மாத்திரை நல்ல தரத்தோடு விலை மிகவும் மலிவாக இந்தியாவில் மட்டும் கிடைக்கிறது. அங்கே தற்போது ஆளும் அரசின் சிறந்த ஏற்பாட்டில் கேன்சர் பாதித்த மக்களின் நன்மை கருதி அங்கே நிறைய கிடைக்க அந்த அரசு ஏற்பாடுகள் செய்திருக்கிறது. இந்தியாவிடம் இருந்து அந்தபார்முலாவை திருடி சுவிட்சர்லாந்து நாட்டு கம்பெனி ஒன்று அதே மாத்திரைகளை தயாரித்து சீனாவில் அதிக விலைக்கு விற்று வருகிறது.

ஆனால் நமது சீனாவில் அந்த இந்திய மாத்திரையை கொண்டு வர அனுமதி இல்லை. உனக்கு இந்தியாவில் இருந்து நிறைய மூலிகைகள் வருவதால் இந்த மாத்திரையையும் நீ கடத்தி கொண்டு வந்தால் என்னைப்போல் கேன்சர் பாதித்த பல லட்சம் சீன மக்கள் பயன்பெறுவார்கள் உனக்கும் நல்ல லாபம் கிடைக்கும். செய்வாயா?” என கெஞ்சி கேட்க்கிறார்

இதை கேட்டு அந்த இளைஞன் மறுத்து விடுகிறான். “யோவ் நான் அந்த மாதிரி கடத்தல் பண்ணி தொழில் பண்ற ஆள் இல்லையா போயா” என்று விரட்டி விடுகிறான், கொஞ்ச நாளில் அவனின் அப்பாவுக்கே கேன்சர் வருகிறது. அதே மாத்திரையை தொடர்ந்து சாப்பிட வேண்டிய ஒரு நிலை வருகிறது. சீனாவில் அதிக விலை கொடுத்து அவனுக்கு வாங்க முடியாத சூழ்நிலை. வேறு வழியில்லாமல் நல்ல தரத்தோடு விலை மலிவாக கிடைக்கும் இந்திய மாத்திரைகளை வாங்கி சீனாவுக்கு கடத்தி செல்ல இந்தியா வருகிறான்.

நிறைய வாங்கி சீனாவுக்குள் திருட்டுத்தனமாக கொண்டு செல்கிறான். பாதித்த மக்களுக்கு குறைந்த விலையில் விற்கிறான். நிறைய லாபம் அடைகிறான். பின்னொரு நாளில் மாட்டிக்கொண்டு நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறான். இது எல்லாம் ஒரு சீன சினிமாவில் வரும் காட்சிகள். ஆனால் உண்மையில் சீனாவில் சமீபத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு இது. அதையே படமாக எடுத்தனர். இந்த படம் வெளியானது 2018 ம் ஆண்டு. “மக்கள் நலனுக்காக நல்லது செய்யும் இந்திய அரசு” என அதில் காட்டப்படுவது நமது நாட்டை !!

படத்தின் பெயர் “டையிங் டூ சர்வைவ்” (Dying to Survive). வெறும் 10.9 மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 498 மில்லியன்கள் வசூலித்து புரட்சி புரிந்தது. இந்த படத்திற்கு 15 க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தது. இந்த படத்தை சீன அதிபர் பார்த்து விட்டு பார்மாசூட்டிக்கல்ஸ் சட்டத்தையே மாற்றி இந்தியாவில் முக்கியமான நோய்களுக்கு நல்ல தரமான மாத்திரைகள் விலை மலிவாக கிடைப்பது போல நமது நாட்டிலும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

இந்தியாவை பற்றி எவ்வளவு உயர்வாக அந்நியர்கள் படம் எடுக்க தொடங்கிவிட்டனர். உலக அளவில் பல்வேறு நாட்டு மக்கள் மனங்களில் இந்தியாவின் மதிப்பு வெகுவாக இன்று உயர்ந்து நிற்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் தான். உலகெங்கும் பல்வேறு நாட்டு பத்திரிக்கைகள், மீடியாக்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்தியாவை பற்றி மிக உயர்வான கருத்துக்களையே பகிர்ந்து வருகிறது.

ஆனால் இன்னும் தமிழகத்தை சேர்ந்த இயக்குனர்கள் கம்யூனிசம் சித்தாந்தம் என்ற பெயரில் முன்னணி நடிகர்களை கொண்டு இந்தியாவை திட்டியே சினிமா எடுக்கின்றனர், மக்கள் மருந்தகம் பெயரில் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள், மற்றும் தீராத நோய்களான காச நோய், கேன்சர் போன்றவற்றிற்கு தேவையான மாத்திரைகளை 2 மடங்கு சந்தை விலையை காட்டிலும் குறைவாக இந்திய அரசு ஆக்கியது, பல பிரச்சைனகளுக்கு மோடி அரசு தீர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையில் முன்னணி நாடாக வலம்வரும் இந்தியா விரைவில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் என மோடி கூறியது விரைவில் நடக்கும் என இதன் மூலம் நம்பலாம்.

நன்றி – சரவண பிரசாத் பாலசுப்ரமணியன்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*