Connect with us

#24 Exclusive

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் கூட்டுபயிற்சி !!

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்
சீனா,ஈரான் மற்றும் ரஷ்யா ஆகியவை இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் கடலில் வெள்ளிக்கிழமை தொடங்கி கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தவுள்ளதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது மேலும்,திங்கட்கிழமை வரை நடைபெறும் இப்பயிற்சிக்கு வழிகாட்டும் ஏவுகணை நாசகாரி கப்பலான ஜைனிங்கை சீனா  அனுப்பி வைத்துள்ளது இது மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்று சீீன ராணுவ அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்தார்.
ஓமான் கடல் என்பது ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணையும் பகுதியாகும் குறிப்பாக இது உலகின் மிகவும் பதற்றம் வாய்ந்த நீர்வழியாகும் - இதன் வழியாக தான் உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது. மேலும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான நேரத்தில் இந்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றி,ஆறு நாடுகளுடன் இணைந்து அதன் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து, அதன் பொருளாதாரத்தை முடக்கியதில் இருந்து மோதல் அதிகரித்துள்ளது. மேலும் ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மீது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவால் ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்ட சவுதி எண்ணெய் நிலையங்கள் மீதான செப்டம்பர் தாக்குதலின் காரணமாகவும் இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் தனது கடற்படையை அனுப்பும் திட்டம் பற்றி ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் நடைபெறும் இப்பயிற்சி அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக மிரட்டலாகவே கருதப்படுகிறது. இது தென்சீன கடல்பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கான பதிலடியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending