Connect with us

#24 Exclusive

முதல்வர் ஆளுநர் திடீர் சந்திப்பு ஏன் அமைச்சரவை மாற்றமா? விளக்கம் அளித்த அரசு !

முதல்வர் ஆளுநர் திடீர் சந்திப்பு ஏன் அமைச்சரவை மாற்றமா? விளக்கம் அளித்த அரசு !

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்தை சந்தித்தார் அதுகுறித்து பல்வேறு யூகங்கள் வெளியான வண்ணம் இருந்தன, ஒருபக்கம் அமைச்சரவை மாற்றம் என்றும் மறுபக்கம் அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு இன்று முதல்வர் சந்திப்பு ஏன் என்று அரசு விளக்கம் அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன் தகவல் பின்வருமாறு :-

Loading...

ஆளுநரை முதலமைச்சர் 6 மாதங்களுக்கு ஒரு முறையாக சந்தித்து பேசுவது மரபு. அதன் அடிப்படையில்  மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Loading...

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இப்போது ஆளுநரை முதலமைச்சர் சந்தித்து பேசினார்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினை, வெளிநாடு சுற்றுப்பயணம் மற்றும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வதுடன் ஆலோசனை நடத்தினார். என்றும் குறிப்பிட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Trending