மீண்டும் சிறையில் சிதம்பரம் !

மீண்டும் சிறையில் சிதம்பரம் !

ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்துள்ள வழக்‍கில், வரும் 13ம் தேதி வரை, ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்‍க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ.யும், அமலாக்‍கத்துறையும் தனித்தனியாக வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்‍கில் ப.சிதம்பரத்திற்கு கடந்த 22ம் தேதி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், அமலாக்‍கப்பிரிவு தொடர்ந்த வழக்‍கில் அவருக்‍கு ஜாமின் வழங்கப்படவில்லை. இதனால் திஹார் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை சிதம்பரத்திற்கு ஏற்பட்டது.

இன்று வரை சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்‍க அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தின் தற்போதைய உடல் நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அமலாக்‍கத்துறை, அவரை மேலும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்‍கை வைத்தது. கோரிக்‍கையை நிராகரித்த டெல்லி​சிபிஐ நீதிமன்றம், சிதம்பரத்தை, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்‍க உத்தரவிட்டது. 3 வேளையும் சிதம்பரத்திற்கு வீட்டு உணவு அளிக்‍கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Loading...

இதனிடையே, ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில், இடைக்‍கால ஜாமின் கோரி, ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு நாளை விசாரணைக்‍கு வரும் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *