Connect with us

#24 Exclusive

தனி ஆளாக பாதிரியார் சற்குணம் முதல் இருவரை ஓட ஓட விரட்டி அடித்த அந்த வைரல் பெண்மணி !

சமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கடந்த வாரம் ஒரு வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டது, தொடர்ந்து தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளை குறிவைத்து அங்குள்ள இந்துக்களை மதமாற்றினால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படும் என்ற ஆசையை காரணம்காட்டி பலரும் மதம்மாற்ற வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றசாட்டு எழுந்தவண்ணம் இருந்தது.

சுதேசி கலைச்செல்வி

அதே போல் சென்னை திருநின்றவூர் அருகே இரண்டு நபர்கள் இந்துக்கள் குடியிருக்கும் பகுதியை குறிவைத்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிறிஸ்துவ மதம் குறித்த பிரச்சார துண்டுகளை விநியோகித்த வண்ணம் இருந்துள்ளனர், அப்போதுதான் ஒரு பெண்ணிடம் வசமாக சிக்கி அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த பெண் சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத்தலைவர் கலைச்செல்வி என்றும் தீவிரமாக மதமாற்றத்தை எதிர்த்து போராடுபவர் என்ற தகவல் கிடைத்துள்ளது., மேலும் இவர் பாதிரியார் சற்குணம் இந்துக்கள் குறித்து சர்ச்சையாக பேசியபோது அதனை நேரடியாக கண்டித்ததுடன், காவல்நிலையம் சென்று புகார் அளித்து எதிர்த்து கேள்வி கேட்டவர் என்பதும் கூடுதல் தகவல்.

Loading...

Loading...

முதலில் மதமாற்றம் நமது நாட்டின் சாபக்கேடு என்றும் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு நாம் தீர்வுகாணவேண்டிய நேரத்தில் இப்படி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், பெண்கள் வீதிக்கு வந்துவிட்டால் இனி இந்து மதத்தினை விமர்சனம் செய்பவர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் அடையாளம் தெரியாமல் சென்றுவிடுவார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இவர் மதம்மாற்ற வந்தவர்களை நோக்கி எழுப்பிய கேள்வி வைரலான வீடியோ :-

©TNNEWS24

Loading...

Trending