சென்னை திருச்சி விமானத்தில் பிடிபட்ட இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேர் திட்டமிட்டு உடலை ஆயுதமாக மாற்றினர் !

சென்னை திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து நகை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய செயலாக மாறிவருகிறது, இந்நிலையில் உடலை ஆயுதமாக மாற்றி மலக்குடலில் தங்கப்பசையை ஒட்டி நகைகளை மறைத்து கடத்தியுள்ளனர்.

Loading...

ஞாயிறன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாவூசன் பரே (37) என்பவரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் வழிமறித்து விசாரித்தனர்.  அப்போது தங்கப்பசை அடங்கிய பொட்டலங்களை தமது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.   இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்த  ரூ.11.9 லட்சம் மதிப்புள்ள 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
திங்களன்று காலை ஏர் இண்டியா விமானம் மூலம் கொழும்பு செல்லவிருந்த இலங்கையைச் சேர்ந்த சசிகா ரூபினி (49) மற்றும் வசந்தி (49) ஆகிய இரண்டு பெண்களை, விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் புறப்பாடு பகுதியில் வழிமறித்து  சோதனையிட்டதில், அவர்களது கைப்பையில் 100 டாலர்கள் மதிப்பிலான 20,300 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்திய ரூபாயில் இது ரூ.14.30 லட்சம் மதிப்புடையதாகும். 
 
வேறு இரு சம்பவங்களில், துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ரிபாயுதீன் (25), சென்னையைச் சேர்ந்த சீனி இப்ராஹிம் (49) ஆகியோரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டதில், ரிபாயுதீனின் பேண்ட் பையிலிருந்து 115 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் இருவரையும்  சோதனையிட்டதில், இருவரும் தலா 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு 660 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.  மொத்தத்தில் ரூ.32.18 லட்சம் மதிப்புள்ள 782 கிராம் கைப்பற்றப்பட்டது.  இதுதொடர்பான ஒரு பயணி கைது செய்யப்பட்டார். 
 
இதுதவிர, அபுதாபியில் இருந்து எட்டிகாட் விமானம் மூலம் வந்த திருச்சியைச் சேர்ந்த ஹிக்மத்துல்லா (40) என்பவரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து விசாரித்ததில், தங்கத்தை ரப்பரில் சுற்றி மலக்குடலில் மறைத்து கடத்தி வந்ததை  ஒப்புக் கொண்டார்.  இதையடுத்து, அவரிடம் இருந்து 3 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.18.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
ஆகமொத்தம், ரூ.63 லட்சம் மதிப்புள்ள 1.53 கிலோ தங்கமும், ரூ.14.30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் (ஒட்டுமொத்தத்தில் ரூ.77.3 லட்சம்) கைப்பற்றப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*