சென்னையில் மூடி சீல் வைக்கப்படட் ரயில் நிலையம் – 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னையில் மூடி சீல் வைக்கப்படட் ரயில் நிலையம் – 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி!

Loading...

சென்னை மந்தவெளி ரயில்நிலையத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்தே சென்னையில்தான் அதிக பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 538 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. இதற்கு கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு முக்கியமானக் காரணமாக அமைந்தது.

Loading...

இந்நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறைகளில் தங்கி 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதில் ஒரு காவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மற்ற 39 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

சோதனையின் முடிவில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறிதியானது. இதையடுத்து 5 பேரும்  தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த ரயில் நிலைய அறையும் சீல் வைக்கப்பட்டு ரயில் நிலையம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக (containment zone) மாறி இருக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக கண்டெய்ன்மெண்ட் ஸோனுக்குள் வந்த ரயில்நிலையமாக மந்தைவெளி ரயில்நிலையம் உள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*