ஊரடங்கை மீறும் சென்னை மக்கள் – வாகன நெரிசலைப் பாருங்கள்!

ஊரடங்கை மீறும் சென்னை மக்கள் – வாகன நெரிசலைப் பாருங்கள்!

Loading...

சென்னையின் பாடி மேம்பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழகத்தில் நேற்று முன் தினம் வரையில் 67 பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் பலியாகி இருந்தார்.. நான்கு பேர் குணமாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில் நேற்று இரவு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மக்கள் ஊரடங்கை ஒழுங்காக பின்பற்றாமல் இருந்து வருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று காலை பாடி மேம்பாலத்தில் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான வேலை நாட்களில் இருக்கும் அளவுக்கு நெரிசலாக இருந்துள்ளது. இதனால் வைரஸ் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*