மீண்டும் நீதிபதிகள் வீட்டில் இருந்தே விசாரணை – பின்னணி இதுதான்!

மீண்டும் நீதிபதிகள் வீட்டில் இருந்தே விசாரணை – பின்னணி இதுதான்!

Loading...

சென்னையில் மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நீதிபதிகள் வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நீதிபதிகள் வீடுகளில் இருந்தே விசாரிக்கப்பட்டன. இதனால் பல லட்சக் கணக்கான வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜுன் 1 ஆம் தேதிக்குப் பின்னர் நீதிமன்றங்களுக்கு வந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணையைத் தொடங்கினர் நீதிபதிகள்.

Loading...

வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’இனிமேல் இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகள் கொண்ட அமர்வுகளும் மட்டுமே செயல்பவார்கள் என்றும், அவர்களும் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்பெரன்ஸ் மூலமாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*