Connect with us

#24 Exclusive

மூடப்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் யாரும் உரிமைகோர முடியாது ! காரணம் என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம் நேற்று இரவு செயல்படுத்தப்பட்டது, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து வாயில்களும் ஒரு நாள் மூடப்பட்டுள்ளன.
150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது. இதன் வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நீதிமன்ற நுழைவு வாயில்கள் ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்றிரவு (சனி ) 8 மணி முதல் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே ஒருவர் கூட யாரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

Loading...

Trending