Connect with us

அரசியல்

நீதிபதி தஹில் ராமணியையும் இழுத்துவிட்ட திருமுருகன் காந்தி வில்லனாக அமைந்த சிலை கடத்தல் வழக்கு

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ராமனி மீது சிபிஐ விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளது தமிழகத்தில் பலருக்கும் அதிர்ச்சியையும் ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஏன் தஹில் ராமனி மீது சிபிஐ விசாரணை :-

Loading...

இந்திய புலனாய்வு ஏஜென்சி அளித்துள்ள அறிக்கை தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தவை தஹில் ரமானி ரூ.3.18 கோடிக்கு புதிதாக கட்டப்பட்ட 2 சொகுசு வீட்டினை வாங்கி உள்ளார். இதில் ₹.1.62 கோடி HDFC வங்கியில் இருந்த பெற்ற கடன் மூலமும், ₹ 1.56 கோடி தனது சொந்த பணத்தில் இருந்தும் அளித்துள்ளார்.

Loading...

தஹில் ரமானிக்கு சொந்தமாக 6 வங்கிக் கணக்குகள் உள்ளன. இவற்றில் 3 தனது கணவருடன் இணைந்த கணக்காகவும், ஒன்று அவரது தாயுடன் இணைந்த கணக்காகவும், ஒன்று ராமனியின் சம்பள கணக்காகவும், மற்றொன்று தனது மகனுடன் இணைந்த கணக்காகவும் ( joint account )வைத்துள்ளார். இந்த கணக்குகளில் இருந்து ₹.1.61 கோடி பணம், நீதிபதி தஹில் ரமானியால் நடத்தப்படும் மும்பை நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தனது தாயுடன் இணைந்த கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ₹.18 லட்சம், அடுத்த மாதமே காசோலை மூலமாக மீண்டும் அவரின் கணக்கில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது இது சந்தேகத்தை எழுப்பியது என்றும்,

அத்துடன் சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள செல்வாக்கு மிகுந்த நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வை தஹில் ரமானி, திடீரென கலைத்துள்ளார் அது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் இந்த அறிக்கை அடிப்படையில் தஹில் ரமானி மீது சந்தேகம் அதிகரித்ததாகவும்.

வழக்கமாக இந்தியாவிற்கு எதிராக பேசக்கூடிய போராட கூடிய இயக்கங்களான மே 17 போன்றவை தஹில் ராமணிக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தும், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெறுதல் குற்றச்சாட்டின் புகாரில் சிபிஐ வளையத்திற்குள் உள்ள திருமுருகன் காந்தி போன்றோர் வழக்கத்திற்கு மாறாக ராமணியை பணியிடமாற்றம் செய்ததை கண்டித்தும் அவரை மீண்டும் சென்னையிலேயே பணியை தொடர அனுமதிக்கவேண்டும் என்று தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது என்றும்.

இதன் மூலமே தேடியதில் வங்கிக்கணக்கு பரிமாற்ற விவரங்கள் கிடைத்தாகவும் அதனை தொடர்ந்து புலனாய்வு ஏஜென்சிஸ் தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் திருமுருகன் காந்தி போன்றோர் தஹில் ராமணியை சிக்கலில் இழுத்து விட்டுள்ளனர்.

மேலும் பாலசுப்ரமணிய ஆதித்யன் போன்றோர் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே சிலை கடத்தல் அமர்வை தலைமை நீதிபதி மாற்றி அமைந்ததில் ஏதோ உள்நோக்கம் இருபதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததும் குறிப்பிட தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending