Connect with us

சர்ச்சைகள்

வயதானவர்கள், கர்ப்பிணி பெண் என்று பாரத கொடூர செயலை அரங்கேற்றிய சென்னை டிரைவர் நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னையில் நேற்று நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஹரிப்ரசாத் என்ற நபர் தமது வயதான பெற்றோர்கள் கர்ப்பிணி பெண், 3 வயது அரைத்தூக்கத்தில் உள்ள குழந்தையுடன் திருவல்லிக்கேணி உத்திராதி மேட்டில் இருந்து அவரது வீட்டிற்கு செல்ல OLA டாக்ஸியை புக் செய்துள்ளார்.

அதன் பிறகு அவருக்கான வாகனம் ஒதுக்கப்பட்டு புக்கிங் ID – 4737027627) கொடுக்கப்படுகிறது டிரைவர் பெயர் இன்பன்ட் ஜீசஸ் என தெரிவிக்கப்படுகிறது, சிறிது நேரத்தில் டிரைவர் கால் செய்து ஏறும் இடத்தை கேட்டுக்கொண்டு அங்கு வருகிறார், வந்தவுடன்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, டிரைவர் வாகனத்தில் ஏற முயன்ற முதியவரின் நெற்றியில் நாமம் போடப்பட்டதை பார்த்தவுடன் கதவை மூட சொல்கிறார்.

உடனடியாக வேறு வாகனம் வரும் என்று அங்கிருந்து தனது பயணத்தை நிறுத்திவிட்டு செல்கிறார், இதனால் வெகுநேரம் வாகனத்திற்காக காத்திருந்தவர்கள், அதிர்ச்சி அடைகிறார்கள், அவர் நெற்றியில் வைத்திருந்த இந்து அடையாளம் தான் இன்பான்ட் என்ற டிரைவருக்கு பிடிக்கவில்லையா? இல்லை இந்துக்களையே பிடிக்கவில்லையா என கேள்வி எழுப்ப படுகிறது.

Loading...

தனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து மிகவும் வேதனையுடன் பதிவுசெய்துள்ளார், ஹரி பிரசாத், இதுகுறித்து சம்மந்தப்பட்ட டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதே போல் ஒரு இந்து, கிறிஸ்துவர்களையோ அல்லது இஸ்லாமியர்களையோ இவ்வாறு மதத்தின் அடையாளத்தின் காரணமாக நடுத்தெருவில் நிப்பாட்டி விட்டு சென்றிருந்தார், இந்நேரம் தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்கள் இப்படித்தான் இருப்பார்களா என்ற கேள்வி எழுப்ப படுகிறது.

Loading...

உடனடியாக அரசு தலையிட்டு சம்பந்த பட்ட ஓட்டுனருக்கு உரிய தண்டனை அளிக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் இதே போன்ற நிலையை மற்ற இந்துக்களும் கையில் எடுத்தால் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது, நடவடிக்கை எடுக்குமா அரசு? குரல் கொடுப்பார்களா நடுநிலைவாதிகள்?

இந்த செய்தி குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும் எங்களது குழு பதில் அளிக்க காத்திருக்கிறது, இந்த செய்தியை முதலில் தெரிவிப்பது உங்கள் TNNEWS24.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending