#breaking : #சென்னையில் அடுத்தடுத்து #குண்டுவெடிப்பு துணை #ராணுவம் விரைவு

Loading...

சென்னை : தமிழகத்தில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாகவும், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து மத கோவில்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது குறிப்பாக கோவை மாநகர் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம்

Loading...

காஞ்சிபுரம் திருப்போரூர் கங்கை அம்மன் கோவிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது அதில் 5 நபர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில் ஒருவர் பலியானார், மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் முழுவதும் சோதனை செய்தனர் அதில் வெடிக்காத நிலையில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்ற பட்டநிலையில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது, குறிப்பாக இது தீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கும் என்ற ரீதியில் உளவு அமைப்பினரும் விரைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்

இந்நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து துணை இராணுவ படையினர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது தீவிரவாதிகளை தேடும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது.

மேலும் வீடியோ :-

தமிழக ஊடகங்கள் இந்த செய்தியை ஒப்புக்கு கூட வெளியில் சொல்லாமல் அமைதிகாத்து வருவது மட்டுமல்லாமல் இதுவரை இந்து கோவிலில் குண்டு வெடித்ததற்கு எந்த அரசியல் கட்சி தலைவரும் கண்டனம் செலுத்தாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம் :-இந்த செய்தி குறித்து தினகரன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி

https://m.dinakaran.com/article/news-detail/520909

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*