Connect with us

#24 Exclusive

முற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை CAA போராட்டத்தில் இருதரப்பு முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட சண்டை வைரல் !!!

CAA சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அப்போது சிலர் கற்கள் செருப்புகளை கொண்டு போலீசாரை தாக்க காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக எச்சரித்தனர்.

சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலக முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11-ந்தேதி வரை தடை விதித்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

Loading...

மார்ச் 12-ந்தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அதற்குள் போலீசாரும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றும், தடையை மீறி போராட்டம் நடத்தினால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று இரவு உடனடியாக 22 முஸ்லிம் அமைப்பினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அதில் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

Loading...

இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் 22 முஸ்லிம் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக திரண்டனர்.

தடையை மீறி தலைமைச் செயலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்றார், தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க போலீசார்  தயாரானார்கள். தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணியில் இருந்தே 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மெரினா கடற்கரை சாலை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, நேப்பியர் பாலம், தீவுத்திடல், சிவானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அங்கு குவிந்து இருந்தனர். மேலும் கலவரம் வெடித்தால் கட்டுப்படுத்த ஆயுதங்களையும் கைவசம் வைத்திருந்தனர், மேலும் இந்த முறை அனைத்து காவலர்களுக்கும் லத்தி கொடுக்கப்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டும் பயன்படுத்த உத்தரவு கொடுக்கப்பட்டது.

இதனால் போராட்ட காரர்களில் ஒரு தரப்பினர் சட்டமன்றத்தை முற்றுகை இடுவதில் சுணக்கம் காட்டினர், மற்றொரு தரப்பினரோ ஆசாத்தி ஆசத்தி என கோஷமிட்டு முற்றுகையிட்டே தீரவேண்டும் என கோதாவில் இறங்கினர் இதனால் இரண்டு தரப்பாக பிரிந்து தங்களுக்குள் வாக்குவாதத்திலும் ஒரு சில இடங்களில் கைகளப்பிலும் ஈடுபட்டனர்.

ஆசத்தி ஆசத்தி என கத்தியவர்கள் காவல்துறை நின்ற தோரணையும், உயர்நீதிமன்றம் தடை விதித்ததையும் கணக்கில் கொண்டு போராட்டத்தை பாதியிலேயே முடித்து கொண்டனர். இதனால் இன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை வைத்து அரசியல் செய்யலாம் எனவும், விவாதங்கள் நடத்தலாம் எனவும் இருந்த ஊடகங்கள் ஏமாற்றம் அடைந்தனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending