Connect with us

#24 Exclusive

தங்கத்தை மலக்குடலில்கடத்திய சாதிக் லேப்டாப்பை எதில் வைத்து கடத்தினார் தெரியுமா? ஷாக்கான அதிகாரிகள் !

சென்னை :- சென்னை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் இராமநாதபுரம், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்றால் கடுமையான சோதனையை உண்டாக்கும் நிலைக்கு ஒரு சிலர் உண்டாகிவிட்டனர், அதிலும் குறிப்பாக 90% கடத்தலில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் பிடிபட்டு இருப்பதால் அவர்களை கடுமையான சோதனைக்கு அதிகாரிகள் உள்ளாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமையன்று துபாயிலிருந்து துபாய் விமானத்தில் வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜஹ்பர் சாதிக் (வயது 39) என்பவரை இடைமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்கக்கட்டி, 30 கிராம் தங்கச் சங்கிலி என்று மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது பெட்டியை சோதனை செய்ததில் 22 அட்டைப் பெட்டிகளில் இருந்த ரூ.52,000 மதிப்புள்ள குடாம் கரம் சிகரெட்கள் (5280 குச்சிகள்) மற்றும் ரூ.85,000 மதிப்புள்ள 17 லேப்-டாப்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Loading...

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது மலக்குடலில் ரப்பர் இழையால் மூடப்பட்டு 3 பொட்டலங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டார். ரூ.13.45 லட்சம் மதிப்பிலான 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மற்றும் லேப்-டாப் உள்ளிட்ட ரூ.16.32 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கத்தை மலக்குடலில் வைத்து கடத்திய சாதிக் இந்த முறை லேப்டாப்பை சற்று வித்தியாசமாக கடத்தியுள்ளார்.

Loading...

பாதுகாப்பு சோதனையில் லேப்டாப் உள்ளே இருப்பது தெரியாத அளவிற்கு தொழில்நுட்ப சீட்டால் அட்டைப்பெட்டி உள்ளே ஒட்டி வித்தியாசமான முறையில் கடத்தியுள்ளார், அட்டைப்பெட்டியை சோதனை செய்ததில் அதில் எதுவுமே இல்லாததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர், அதன்பிறகு சோதனை செய்தபோதுதான் உள்ளே லேப்டாப்கள் இருப்பது கண்டறியப்பட்டது. திருட்டில் கூட புது தொழில்நுட்பம்.

©TNNEWS24

Loading...

Trending