25 வயதில் ஹாபிஸ் என்ற சென்னையை சேர்ந்தவன் செய்த செயலை பார்த்தீர்களா? ஒட்டுமொத்த விமா னநிலையமும் அதிர்ந்தது !

25 வயதில் ஹாபிஸ் என்ற சென்னையை சேர்ந்தவன் செய்த செயலை பார்த்தீர்களா?  ஒட்டுமொத்த விமா னநிலையமும் அதிர்ந்தது !

ஹாங்காங்கிலிருந்து காத்தே பசிபிக் விமானத்தில் ஒரு பயணி மூலம் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, கடத்தல்காரரைப் பிடிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். 

குறிப்பிட்ட அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், புலனாய்வுத்துறையின்  ஒரு குழுவினர் பல்வேறு மறைவான வகைகளில் கடத்தலை தடுப்பதற்கான முயற்சியில் அந்த விமானத்தை ஆய்வு செய்தனர். மற்றொரு குழுவினர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் காத்திருந்தனர்.

     ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த விமானத்தை ஆய்வு செய்ததில், ஒரு இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொட்டலங்களை சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஏற்கனவே விமானத்திலிருந்து வெளியேறிவிட்டதால், அவரை பிடிக்க முற்பட்டனர். ஒரு பயணி அவசர அவசரமாக விமானத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது அவரை புலனாய்வு அதிகாரிகள் வழிமறித்தனர்.

Loading...

அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது பெயர் ஷேய்குல் ஹாஃபிஸ் (25) என்றும், சென்னையைச் சேர்ந்தவர் என்றும் நான்கு பொட்டலங்கள் கைப்பற்றப்பட்ட அந்த இருக்கையில்,  தான் பயணம் செய்ததாகவும் தெரிவித்தார். தங்கக் கடத்தல் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, முதலில் அவர் மறுத்தாலும், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்தப் பொட்டலங்களை தானே இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். 

Loading...

     நான்கு பொட்டலங்களை பிரித்துப் பார்த்த போது, வெளிநாட்டு முத்திரையுடன் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடையுள்ள நான்கு தங்கக் கட்டிகள் என்று மொத்தம் நான்கு கிலோ தங்கமும், அத்துடன் 1.05 கிலோ எடையுள்ள நான்கு சிறிய தங்கக் கட்டிகளும் இருந்தன. ரூ.1.91 கோடி மதிப்பிலான மொத்தம் 5.05 கிலோ தங்கத்தை சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பயணியையும் கைது செய்தனர்.  

25 வயதான இளைஞன் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதும் அதனை பிடிக்க சரியான முறையில் திட்டமிட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டினால் சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது, விமானத்தில் ஏதேனும் பாம் இருக்குமோ என்று சந்தேகபட்ட பயணிகள் தங்கம் இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *