சென்னை விமான நிலையம் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு !

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முகமையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது, இனி உங்கள் உடமைகளை சோதனை செய்ய அதிகநேரம் காத்திருக்க தேவையில்லை புதிய அதிநவீன சிடிஸ்கேன் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Loading...

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் புறப்பாடு பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிடிஎக்ஸ் எனப்படும் கணினி வரைவி எக்ஸ்ரே அடிப்படையில் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் நடைமுறை, இன்று (02.01.2020) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

இதன் காரணமாக, பயணிகள் இனி நீண்டவரிசையில் காத்திருக்காமல், செக் இன் கவுண்டர்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்த தங்களது உடைமைகளை, விரைவான நடைமுறைகள் மூலம் குறைவான நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். 
மொத்தம் 58 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு முனையத்தில் 4, சர்வதேச முனையத்தில் 4 என மொத்தம் 8 சிடிஎக்ஸ் ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  சர்வதேச முனையத்தில் பழைய ஈடிஎஸ் ஸ்கேனர் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக 02.01.2020 முதல் சிடிஎக்ஸ் ஸ்கேனர் நிறுவப்பட்டுள்ளது. 

Loading...

இந்த புதிய வகை சிடிஎக்ஸ் ஸ்கேனர்கள் ஒரு மணிநேரத்தில் 1800 பெட்டிகளை கையாளும் திறன்கொண்டது என்பதோடு, சோதனை நடவடிக்கைகளை விரைவாகவும், மேம்பட்ட வகையிலும் மேற்கொள்ள முடியும்.  வாராந்திர அடிப்படையில் இந்த கருவி இரு (உள்நாட்டு மற்றும் சர்வதேச) முனையங்களிலும் 75000-க்கும் மேற்பட்ட பெட்டிகளை கையாளும். 
உள்நாட்டு முனையத்தில் இந்த கருவி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, பரிசோதனை முறையில் இயங்கி வருகிறது.  இது விரைவில் முறைப்படி செயல்பாட்டிற்கு வரவுள்ளது.  பயணிகளின் பெட்டிகளை கையாளும் நடைமுறையும் உயர்திறன் வாய்ந்த பி எல் சி, டிரைவ்ஸ், கன்வேயர்கள் மற்றும் கட்டுப்பாட்டு முறை மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவிகளை அமெரிக்காவைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட முகமையான டிஎஸ்ஏ நிறுவனம் முழுமையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.  இந்தியாவில் உள்நாட்டு விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான பிசிஏஎஸ் நிறுவனத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சென்னை விமான நிலைய தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*