Connect with us

#24 Exclusive

சார் திரௌபதி படத்தில் உங்களை கேள்வி கேட்ட நிருபர் ரூட்டை மாற்றிய திருமா !! இதற்கு பெயர்தான் பயமோ??

தமிழ் சினிமாவும் சரி ஊடகங்களும் சரி எப்போதும் இடதுசாரிய சிந்தனை கொண்ட இயக்குனர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அதிகமாக கொண்ட அமைப்பாக பல காலமாக இயங்கி வந்துள்ளது, ஆனால் சமீப காலமாக அதில் பெரிய மாற்றங்கள் உண்டாகி வருகின்றன என்பது தெள்ளத்தெளிவாக மக்களுக்கு தெரியவருகிறது.

அந்த வகையில் crowd funding மூலம் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் திரௌபதி அதன் ட்ரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி மிக பெரிய பரபரப்பை உண்டாக்கி வருகிறது, நாடாக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ஒரு பெண் காதல் வலையில் சிக்கி விழுவதால் அவர்கள் குடும்பம் எதுபோன்ற அவமானங்களை சந்திக்கிறது, உயிரை விடுவதுயார் என்ற பல காட்சிகளை இயக்குனர் மோகன் காட்சி படுத்தியுள்ளார்.

இதில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிசிரிச்சார்ட் கதாநாயகனாக நடித்துள்ளார், விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கிண்டல் செய்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது, இந்த சூழலில்தான் நேற்று நள்ளிரவு செய்தியாளர்களை சந்தித்த திருமவளவனிடம் திரௌபதி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்ப பட்டது, அதில் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர்..,

Loading...

திரௌபதி படத்தில் உங்களை மிகவும் கிண்டல் செய்திருக்கிறார்கள் சார், நாடக காதல், மண்ணு, பொண்ணு மேலே கையவச்சா வெட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள் இதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டிருந்தார், ஆனால் திருமாவளவன் கடைசிவரை திரௌபதி திரைப்படம் குறித்து வாயே திறக்கவில்லை, மாறாக அமெரிக்காவிற்கு ஈரான் மீதான தாக்குதல் நடத்தியதற்கும், JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

Loading...

திருமாவளவன் கண்டனம் தெரிவிக்காததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது, அதில் ஒன்று கருத்து சுதந்திரம் விஜய்யின் மெர்சல் படத்தில் பிரதமரை கிண்டல் செய்திருப்பதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, தணிக்கை துறையின் சான்று பெற்ற பின்பு படத்தை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் என மேடை தோறும் விவாதங்களில் பேசினர்., மேலும் அசுரன் போன்ற திரைப்படங்களையும், பா ரஞ்சித் படத்தையும் வாழ்த்தி பேசினார்கள் இப்போது திரௌபதி படத்தை எதிர்த்தால் நடுநிலை எங்கே போனது என கேள்வி கேட்பார்கள் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம். திருமாவளவன் பேட்டி கீழே !

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதானே?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending