Connect with us

#24 Exclusive

ஊருக்கு பாடம் எடுக்கும் லைவ் புகழ் பியூஸ் மனுஷ் சிக்கினார், மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்.

ஜக்கி வாசுதேவ் கோவையில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்றும் மத்திய அரசு விவசாயம் போன்றவற்றை அழிக்க பார்க்கிறது எனவும் சேலம் பாஜக அலுவலகத்திற்கே சென்று விவாதம் நடத்திய பியூஸ் மனுஸ் தற்போது வாடகை வீட்டினை ஆட்டைய போட முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.

சுற்று சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷிற்கு சேலத்தில் உள்ள தங்களது வீட்டினை லீசிற்கு 2015-ம் ஆண்டு விட்டதாகவும் ஆனால் தற்போது தங்களுக்கு வீடு தேவை என்பதால் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து வீட்டின் உரிமையாளர் பியூஸ் மனுஷிடம் வீட்டினை காலிசெய்ய அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் அவரோ வீட்டினை காலி செய்ய முடியாது எனவும் உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டுவதாகவும், மேலும் தங்களை தாக்குவதாகவும் வீட்டின் உரிமையாளர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Loading...

இதுகுறித்து பலரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர், பெண் என்றும் பாராமல் கெட்ட வார்த்தையில் பேசும் பியூஸ் எவ்வாறு பொதுவாழ்வில் உண்மையாக இருப்பார் எனவும் கேள்வி எழுப்புகின்றனர், வாடகை வீட்டினை காலி செய்ய மறுக்கும் பியூஸ், இதற்கு முன்னர் போத்திஸ் துணிக்கடையை மிரட்டி செக் வாங்கியது பொது வெளிக்கு வந்ததால் தான் கிழித்து போட்டிருப்பார் எனவும் பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

Loading...

மக்களுக்காக போராடுகிறோம் என்று செல்போனை தூக்கி கொண்டு வருபவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சுயவாழ்வில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும் இதுகுறித்து பியூஸ் மனுஷ் விளக்கம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending