Connect with us

Uncategorized

மாற்று மதத்தினரை திட்டி என்ன பயன் வழிபாட்டு முறையில் தலையிடம் இவர்களை விரட்டி அடியுங்கள் பானு கோம்ஸ் நச் கருத்து !

தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என்று சில அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன, அதில் பலர் இந்துக்கள் அல்லாதோராக இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் உண்டாகி வருகின்றன, இந்நிலையில் தொடர்ந்து இந்துக்கள் வழிபாட்டு முறையினை குறிவைத்து செயல்படும் இந்து விரோத அமைப்புகளை தேர்தலில் இருந்தே அப்புற படுத்துங்கள் என்று சமூக சிந்தனையாளர் பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-

தஞ்சை கோவில் வழிபாடு விவகாரத்தில் .. மாற்று மதத்தினருக்கு என்ன வேலை ?
என்கிற நியாயமான கேள்விகளை காண முடிகிறது. இதில் மாற்று மதத்தினரை குறை சொல்ல ஒன்றுமில்லை.
மாற்று மதத்தினரை உள் இழுத்து.. இது போன்ற செயல்களை அரங்கேற்றும் இந்து வெறுப்பு & இந்து விரோத அரசியல் கட்சிகள் தான்.. விமர்சிக்க படவேண்டியவை !

தேர்தலில் வாக்களிக்காமல் முற்றிலுமாக புறம் தள்ளப் படவேண்டியவை! மத நல்லிணக்கத்தை நுணுக்கமாக சீரழிக்கும் இத்தகைய கட்சிகள் தான் அக்மார்க் மதவெறி கட்சிகள்!அதை விட்டுவிட்டு மாற்று மதத்தினரை திட்டுவது இத்தகைய கட்சிகளின் திட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாகும்.

Loading...

அரசியல் யுக்திகளை புரிந்து கொண்டு ஜனநாயக முறையில் எதிர்வினையாற்றும் சமூகமே…ஜனநாயக நாட்டில் வெற்றி பெறும்.மாற்று மதத்தினருக்கு மேடை அமைத்து தந்து இந்து விரோதமாக இயக்குவது இந்து விரோத அரசியல் கட்சி. அக் கட்சிக்கு துணையிருப்பது அதன் அரசியல் அதிகாரம்.

Loading...

தேர்தல் மூலம் கிடைப்பது அரசியல் அதிகாரம். இந்த அடிப்படை பலமே அனைத்து கேடுகளுக்கும் மூலம் இக் கட்சிகள், தேர்தலின் போது .. எத்தகைய இந்து பக்திமானை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர் கோவில்களுக்கு கோடி கோடியாக வாரி வழங்கி இருந்தாலும்…அத்தகைய போலித்தனங்களை புரிந்து கொண்டு ..இந்துக்கள் ஒன்றுகூடி வாக்களிக்காமல் முற்றிலுமாக புறக்கணித்து ..அரசியல் அதிகாரத்திலிருந்து இந்துவிரோத கட்சிகளை வெளியேற்றுவது ஒன்றே பலன் தரக்கூடிய வழிமுறை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...

Trending