மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பு சட்டம் சிறை செல்லும் நடிகர் சத்யராஜ்? ரசிகர்கள் வேதனை

சென்னை.,

Loading...

திராவிட சித்தாந்தம் கொண்ட தமிழக சினிமா பிரபலங்களில் சற்று வித்தியாசமானவர் நடிகர் சத்யராஜ் பெரியாரிஸ்ட் கொள்கை பேசிவரும் கையோடு தமிழ் தேசிய அரசியலும் பேசக்கூடியவர். மேலும் தன்னை கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாக காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் சாதிய ஒழிப்பு போராளியாக நிலை நிறுத்தி கொண்டு வாழ்ந்துவருபவர் சத்யராஜ். கடந்த நடிகர் சங்க கூட்டத்தில் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என்று வீர வசனங்கள் பேசி பின்பு வாபஸ் பெற்றவர்.

இந்நிலையில் கடந்த 2012- ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமை இடமாக கொண்டு இயங்கிவந்த சுசி ஈமு கோழிப்பண்ணை முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 200 கோடி வரை பெற்றுக்கொண்டு ஏமாத்தியதாகவும், 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சுமத்தினர், மேலும் காவல் நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டு தற்போதுவரை நடைபெற்று வருகிறது.

Loading...

இதில் ஈமு கோழி வளர்ப்பு மற்றும் முதலீடு குறித்த விளம்பரத்தில் நடிகர் சத்யராஜ் அப்போதே பல லட்சங்களை பெற்றுக்கொண்டு நடித்திருந்தார். மேலும் முதலீடு செய்த்தவர்களுக்கு பண்ணை உரிமையாளர் குருவை எங்களுக்கு தெரியாது என்றும் நடிகர் சத்யராஜின் விளம்பரத்தை கண்டே ஏமாந்தோம் இப்போது பணமும் போனதுமட்டுமல்லாமல், சொத்துக்களை இழந்து ஈமு கோழிகளுக்கு தீணிகூட போடமுடியாமல் நடுத்தெருவில் நிர்ப்பதாக குற்றம் சுமத்தினர்.

அப்போது சுசி ஈமு கோழி உரிமையாளர் மீது 420 பிரிவின் கீழும் நடிகர் சத்யராஜ் மீது சாதாரண பிரிவு 120 – ன் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு வழக்கு நடைபெற்று வந்தது, ஆனால் தற்போது மத்திய அரசு விளம்பரங்களில் நடைபெறும் மோசடி மற்றும் ஏமாற்று வாசகங்கள் மூலம் மக்களை ஏமாற்றினால் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மீது கிரிமினல் குற்றதின் கீழ் வழக்கு பதிவு செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

இதுதான் தற்போது நடிகர் சத்யராஜிற்கு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது, தற்போது முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பெருந்துறை காவல்நிலையத்தை அணுகி குரு மற்றும் சத்யராஜ் மீது மீண்டும் மோசடி வழக்கு பதிவு செய்ய புதிய சட்டதிருத்தத்தை மேற்கோள் காட்டி புகார் அளிக்க புகார் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நடிகர் சத்யராஜ் ஈமு கோழி மூலம் சுமார் 200 கோடி வரை மக்கள் பணத்தை ஏமாற்றிய வழக்கில் கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என்று சொல்லிய சத்யராஜிற்கு தற்போது ஈமு கோழியே போதும் ராணுவம் எதற்கு என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தற்போது பெரியார் பிறந்தநாளில்தான் இப்படி ஒரு சோக செய்தி வரணுமா என்று சத்யராஜ் தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள் என்று சிலர் அறிவுறுத்திவருகின்றனாராம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*