இனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு ! இனி தி.மு, தி.பி தான்

கீழடி.,

Loading...

லகில் பழமையான தொன்மையான நாகரீகங்களில் ஒன்று தமிழர் நாகரீகம் என்பது தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து தற்போது ஒவ்வொரு தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களும் பெருமையுடன் #கீழடிதமிழர்நாகரீகம் என்று சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற முடிவுகள் தற்போது மதம்மாற்ற கும்பல்கள் தலையில் மற்றொரு இடியாய் விழுந்துள்ளது, இந்திய மொழிகளில் ஒன்றானா தமிழர்களின் நாகரீகம், மொழி குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியான நிலையில் அந்தக்காலத்தில் தமிழர்கள் கிறித்தவ மதத்தையோ அல்லது அரபு நாடுகளில் பின்பற்றபடும் இஸ்லாம் மதத்தையோ பின் பற்றியதற்கான எந்த தரவுகளும் கிடைக்க பெறவில்லை. ஏன் என்றால் தமிழர்களின் நாகரீகத்தின் போது இந்த மதங்கள் தோன்றியதற்கான எந்த சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில்களின் வரலாறை எடுத்து பார்த்தாலே கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருப்பதனால் இது சாத்தியமானத்தில் ஆச்சர்யம் இல்லை என்று தொல்பொருள் துறையில் 50 ஆண்டுகளாக ஈடுபட்டு தற்போது ஓய்வில் இருக்கும் பேராசிரியர் மாணிக்கவாசகம் கூறியுள்ளார்.

Loading...

உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டு அடையாளங்களை வைத்தே அந்த நாட்டின் அடையாளங்கள் ஆண்டுகளை குறிப்பிடுகின்றன குறிப்பாக சீனா, ரஷியா, அரபு நாடுகள் உள்ளிட்டவை. கி.மு மற்றும் கி. பி எனும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு மற்றும் பின்பு என்று குறிப்பிடுவதில்லை ஆனால் இந்தியாவில் தொன்மையான பல மொழிகள் , வரலாற்று சான்றுகள் புராணங்கள் இருந்தும் வெளிநாட்டினர் பயன்படுத்தும் கி. மு மற்றும் கி. பி எனும் வழக்கத்தைதான் பின்பற்றி வருகிறோம்.

அதனை நமது நாட்டு வழக்கத்தில் வரலாற்று சம்பவங்கள் மூலம் மாற்ற மத்திய அரசு அதிரடி முடிவு செய்துள்ளது. அதற்கு நமது மத்திய அரசு தீர்மானித்துள்ளது தமிழர்கள் வரலாற்றை தான். ஆம் திருவள்ளுவர் ஆண்டை அதிகாரபூர்வ இந்திய ஆண்டாக மாற்றி கி. மு , கி. பி க்கு பதிலாக தி. மு மற்றும் தி. பி என்று பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருவள்ளுவர் ஆண்டு என்பது வரலாற்று கணக்கீடுப்படி கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் ( கிரிகோரியன் நாட்காட்டி ) இருந்து 31 ஆண்டுகள் முன்னோக்கி அனைத்து நிகழ்வுகளையும் கணக்கிட்ட முறையாகும்.

இனி இந்தியாவிற்கு தனது அடையாளத்தை பயன்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவினை மத்திய அரசு எடுப்பதன் மூலம் சீனா புத்தாண்டு என்பது போல் இனி இந்திய புத்தாண்டும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்க்க வாய்ப்பே இல்லை என்றும் இதன்மூலம் மத்திய அரசிற்கு நேரடி வெற்றி என்றும் உலக அரங்கில் அனைத்து இந்தியர்களுக்குமான வெற்றியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

#இனி இந்தியா மெல்ல மெல்ல தனது அடையாளத்தை மீட்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*