ஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை!

ஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை!

Loading...

அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் விதமாக இதுவரை நான்கு முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு ஊரடங்கில் கடுமையான பொருளாதார சரிவுகள் ஏற்பட்டதால் அடுத்த இரண்டு ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதுவரையிலான ஊரடங்கு முடிவுகள், நிற மண்டலங்கள் அனைத்தும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.

Loading...

மே 31 ஆம் தேதியோடு நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்தாலும் மீண்டும் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கப்படும் என்ற நிச்சயமற்ற தன்மையே இப்போது வரை நிலவுகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என்ற குரல் கள்எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல மாநில முதல்வர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதனால் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் மாநில அரசுகளின்  பங்கே அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநில அரசுகளால் கொரோனா பாதிப்பு பகுதிகளை கவனமாக கையாளவும், மற்ற பகுதிகளுக்கு தேவையான தளர்வையும் அளிக்க இயலும் எனக் கூறப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*