மத்திய மந்திரி சபை மாற்றி அமைப்பு தமிழகத்தில் புதிதாக இருவருக்கு வாய்ப்பு !!!

கொரோனா பாதிப்புகள், எல்லையில் போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்த பிரதமர் மோடி தற்போது தனது அமைச்சரவை சகாக்களை மாற்றும் முடிவிற்கு வந்திருக்கிறார்.

Loading...

இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவ சேனா ஆகிய கட்சிகளின் அரசியல் செயல்பாடுகள் காரணமாக பார்க்க படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் ஜோதிராத்யா சிந்தியா இவருக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி கொடுப்பதாக பாஜக சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறைவேற்றும் விதமாகவும் ராஜஸ்தானில் அரசியல் மாற்றத்தை உண்டாக்கும் விதமாக அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி முடிவெடுத்து இருக்கிறார், இதில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம் அதன் அடிப்படையில், அதிமுக, பீகார் நிதிஷ்குமார் கட்சி மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த பாஜக MP களுக்கு மத்திய மந்திரி சபையில் இடமளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

அதிமுக சார்பில் ஒருவருக்கும் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க மோடி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது, அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய மந்திரி சபையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் இடம்பெறுவதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான முடிவை எடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து அவர்களாக வெளியேற திட்டமிட்டு வருகிறாராம், அதன் பொருட்டுதான் சமீபத்தில் கருப்பர்க்கூட்டம் எனும் அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது இந்து அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை என்று இருப்பதாக கூறப்படுகிறது.

Iராஜஸ்தான் அரசியல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக உறுதியான தகவல் வெளியான நிலையில் அதில் யார் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் மோடியிடம் நன்மதிப்பை பெற்றுள்ளதால் அவர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் பல முறை மத்திய அமைச்சரவை மாற்ற பட இருப்பதாக செய்திகள் வெளியாகின ஆனால் இந்த முறை நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும் சிலரது மத்திய மந்திரி இலாகா மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3943 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*