Connect with us

#24 Exclusive

மேல்சட்டை இல்லாமல் சபரிமலை செல்வேன் பிரபல பெரியாரிஸ்ட் பெண் அறிவிப்பு !

Published

on

மதுரை :- பிரபல தனியார் தொலைகாட்சியில் சபரிமலைக்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் ஏன் செல்லக்கூடாது, ஏன் செல்லவேண்டும் என்ற விவாதம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடும்ப பெண்கள் பலரும் ஐயப்பன் சந்நிதானத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு அதனை நாம் கெடுக்க கூடாது என்றும் கூறினர்.

அப்போது எதிர்தரப்பில் உள்ள கோவிலுக்கு செல்வோம் என்று கூறிய மற்றொரு தரப்பினர் நாங்கள் கோவிலுக்கு செல்வது நீதிமன்றம் எங்களுக்கு வழங்கியுள்ள உரிமை அதனை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறினர், அதற்கு மதுரையை சேர்ந்த கோமதி என்ற பெண் உங்கள் முகத்தை பார்த்தால் இங்குள்ள கோவிலுக்கே செல்லலாதது போன்று உள்ளது, நீங்கள் எப்போதாவது கோவிலுக்கு போக்கிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

இவ்வாறு இரண்டுதரப்பிலும் காரசாரமான விவாதம் நடைபெற்றது அப்போது திடீரென ஒரு பெண் எழுந்து சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது ஒரு காரணம் சொல்லுங்கள் என்று கேட்க அப்போது எழுந்த ஒருவர் சபரிமலை சன்னிதானம் செல்பவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் பெண்களுக்கு இயல்பாக தீட்டு படுவதால் செல்லமுடியாது என விளக்கினார் அப்போது சந்நிதானத்திற்குள் செல்ல கன்னிசாமிகள் முதலில் மேலாடை இன்றி செல்லவேண்டும், இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இயல்பாக சாமி தரிசனம் செய்யலாம் என்று கூற..,

Loading...

அதற்கு சட்டென சளைக்காமல் நாங்களும் மேலாடையின்றி செல்லத்தயார் என்றும் இப்போது செல்லும் வயதான பெண்கள் மேலாடை இல்லாமலா செல்கிறார்கள் என்று எதிர்கேள்வி எழுப்பினார். சொன்னவர் வேறுயாருமில்லை சென்ற வருடம் ஐயப்பன் கோவில் செல்வதாக 5 பெண்களுடன் சென்று ஐயப்ப பக்தர்களால் விரட்டி அடிக்கப்பட்டவர். இவர்களை போன்ற பெண்ணியவாதிகளால் (பெரியாரிஸ்ட் ) ஒட்டுமொத்த தமிழக பெண்களின் மானமும் சேர்ந்து கெடுவதாக கோமதி வருத்தம் தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending