முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தற்கொலை…ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் ( வயது 57 ) இவர் சென்னை மைலாப்பூரில் வாழ்ந்து வந்தார்.

Loading...

பொதுவாக எந்நேரமும் அவரது வீட்டில் ஆள்நடமாட்டம் தெரியும், ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்தனர், ஆனால் திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,சந்திரசேகர் தூக்கில் பிணமாக தொங்கினார்.இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து மைலாப்பூர் காவல்நிலையத்துக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.போலீசார் விரைந்து வந்து அவருடைய உடலை உடல் குறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரித்த போலீசார், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாகவே சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்தனர்.

Loading...

இவர் இந்திய அணிக்காக 1988 முதல் 1990 வரை ஆடியவர். 7 சர்வதேச போட்டிகளிலும், தமிழக அணிக்காக 81 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.ஒரு ஆட்டத்தில் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தும் இருக்கிறார். மேலும் தற்போது நடந்துவரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*