காவேரி மதனுக்கு கொலை மிரட்டல் வலுவாக கண்டித்து வீடியோ வெளியிட்ட இயக்குனர் முக்கிய தலைவர் மீது குற்றசாட்டு !

சமூகவலைத்தளம்.,

Loading...

காவேரி தொலைக்காட்சியில் தடம் எனும் நிகழ்ச்சியின் மூலம் அதிரடியான கேள்விகளை கேட்டு எதிரே அமர்ந்த பிரபலங்களை திக்கு முக்காட செய்தவர் மதன் எனும் மதன் ரவிச்சந்திரன், வலதுசாரிய, இடதுசாரிய மற்றும் பெரியாரிஸ்ட் கொள்கை கொண்ட அனைத்து அரசியல்வாதிகளையும் சக கேள்விகளின் மூலம் கேள்வி எழுப்பி துளைத்து எடுத்தார்.

அதுபோல் சுப வீரபாண்டியனை நேர்காணல் செய்தபோது மதன் கேட்ட பல கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் திணறிவிட்டார். அதனை தொடர்ந்து மதனை திராவிட அரசியல்வாதிகளும் ஊடக துறையில் உள்ள சில பத்திரிகையாளர்களும் ஓரம் கட்ட எண்ணி மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

Loading...

மேலும் மதனை தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்ற முக்கிய தலைவர் ஒருவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஒரு பத்திரிகையாளர் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு இடையூறுகளை கொடுத்துவரும் நபரை கண்டிக்க இதுவரை எந்த நபர்களும் முன்வராத போது.

பெரியாரிய கொள்கை பேசும், நாத்திகனாக வாழ்ந்து வரும் இயக்குனர் வேலு பிரபாகரன் மதனுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், கொலை மிரட்டல் ஆகியவற்றை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மறைமுகமாக ஒரு முக்கிய தலைவரை குறிப்பிட்டுள்ளார் வேலு பிரபாகரன்.

வீடியோ பார்க்க :-

இதுபோல் மதனனுக்கு ஆதரவாக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்றும், பல்வேறு நபர்களும் சமூகவலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். இப்போது குரல் கொடுக்க மறுத்தால் நாளை இது போன்ற ஊடகவியலாளர்கள் கிடைப்பது கடினம் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

எஸ் வி சேகர் வீட்டில் கல்லெறிந்த பத்திரிகையாளர்கள் சக பத்திரிகையாளர் மற்றும் நேர்மையாக ஒளிபரப்பிய ஊடகத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முடக்கியதை கண்டித்து பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*