Connect with us

#24 Exclusive

பார்க்க வந்த முதியவரிடம் ஜாதி பேச்சு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ஜாதிவெறிதிமுக வைரலாகும் வீடியோ

திமுக கூட்டணிகள் சார்பில் கடந்த திங்கள் அன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது, இதில் பலரும் பங்கேற்றனர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இன்னும் பிற இயக்கங்கள் கலந்து கொண்டனர். பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கண்டங்கள் மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது.

இதில் ஓசூரை சேர்ந்த முதியவர் நாராயணப்பா என்பவர் கலந்து கொண்டார், தனியார் யூடுப் சேனலில் தான் பிறந்ததில் இருந்தே திமுகவில் இருப்பவன் என்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர தொண்டன் என்றும் தற்போது ஸ்டாலின் தலைமையை ஏற்பதாகவும் கூறியிருந்தார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முதியவர் நாராயணப்பாவை அழைத்து நலம் விசாரித்தார், அதன் பிறகு கருணாநிதி உருவம் கொண்ட சிலையினையும், நினைவு பரிசினையும் வழங்கினார்.

ஆனால் தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது, ஜாதி ஒழிப்பிற்கு என்று உருவான இயக்கங்களில் ஒன்று என்று திமுக கூறிவந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதியவரிடம் கௌடறா என கேள்வி எழுப்பினார், கௌடர் என்பது கன்னட ஜாதிகளில் ஒன்று, ஓசூர் பகுதிகளில் கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் இவர்கள் வசிக்கின்றனர்.

Loading...

தற்போது ஸ்டாலின் முதியவரிடம் ஜாதியை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதுதான் பெரியாரும் திமுகவும் ஜாதியை ஒழித்த லட்சணமா எனவும், இதற்கு முற்போக்குவாதிகள் என்ன சொல்ல போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து #ஜாதிவெறிதிமுக என்ற ஹாஸ்டேக் உருவாகி வருகிறது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Trending