Connect with us

#24 Exclusive

CAA விற்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் புகுந்து எதிர்ப்பு கோஷமிட்ட பெண் விரட்டி அடித்த சக பெண்கள் ! காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுகவினர் அதிர்ச்சி வீடியோ உள்ளே

CAA எனும் குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று எதிர் கட்சிகள் போராட்டம், கண்டன ஊர்வலம் நடத்திவருகின்றனர், அதே நேரத்தில் சிறுபான்மையினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கியதாகவும் அந்த மூன்று நாடுகளில் பெரும்பாண்மை மக்களுக்கு மத ரீதியான துன்புறுத்தல் இல்லாத காரணத்தால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதனை அடுத்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு தரப்பும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து NRC NPR ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒருதரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த சூழலில் குடியுரிமை சட்டத்தை பலர் தவறான முறையில் கூறி மக்களை திசை திருப்பி வருவதாகவும் அதனை எடுத்து சொல்ல கேரளா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம் நடைபெறும் எர்ணாகுளம் பகுதியில் கோவிலோடு சேர்ந்த கலையரங்கத்தில் வி.எச்.பி ( VHP) ஏற்பாடு செய்த குடியுரிமை திருத்த சட்ட விளக்க கூட்டத்தில் புகுந்து பிரச்சனை உருவாக்கிய பெண்மணியை சக பெண்கள் துரத்தியடித்த நிகழ்வு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது,

Loading...

கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணிடம் நாங்கள் இன்று போராடவில்லை என்றால் நாளை கேரளா மாநிலத்தில் நெற்றியில் பொட்டு வைத்து கொண்டு நடமாடமுடியாத சூழல் உருவாகிவிடும் என்றும், உன்னை போன்ற ஆட்களுக்கு இனியும் அமைதியாக எடுத்து சொல்வதால் எந்த பயனும் இல்லை என்றுகூறி விரட்டி அடித்தனர்.

Loading...

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது, குறிப்பாக குடியுரிமை சட்டத்தின் எதிர்த்து போராடுவதால் அதற்க்கு ஆதரவாக இந்துக்கள் ஒன்றிணைவது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக இன்னும் பிற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது, தமிழகத்தில் திருப்பூரில் மிக பெரிய அளவில் போராட்டம் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending