CAA ஆதரவு போராட்டம் நடத்திய இந்து இயக்கத்தை சேர்ந்தவர் வெட்டி படுகொலை பெனிக்ஸிற்கு நீதி கேட்டவர்கள் இதை கண்டுகொள்வார்களா?

CAA ஆதரவு போராட்டம் நடத்திய இந்து இயக்கத்தை சேர்ந்தவர் வெட்டி படுகொலை பெனிக்ஸிற்கு நீதி கேட்டவர்கள் இதை கேட்பார்களா?

Loading...

திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் தனது ஊரில் மதமாற்றம் செய்யவந்தவர்களை தடுத்து நிறுத்தி எதிர் கேள்வி கேட்டதற்காக, அன்று இரவே கை கால்கள் போன்றவற்றில் குர்பானி கொடுப்பதுபோல் மகன் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அன்று இந்து இயக்கங்கள் மிக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்த சூழலில் கொலையை செய்த இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யபட்டு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை செய்யப்பட்டு சிறையில் உள்ளனர், இந்நிலையில் தற்போது மற்றொரு கொடூர சம்பவம் மீண்டும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

Loading...

R.S.S பொறுப்பாளர் நாச்சியார் கோயில் வாசுதேவன்ஜி அவர்கள் தந்தை இன்று ராமலிங்கம் எவ்வாறு வெட்டிக்கொல்லப்பட்டாரோ அதே பாணியில் வலது கை வெட்டப்பட்டு குர்பானி கொடுப்பதுபோல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார், இவர் CAA விற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர் என்பதால் சில தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு குறித்து மணிக்கு பல முறை செய்தி வெளியிடும் எந்த ஊடகங்கள், அரசியல்வாதிகள், தன்னார்வ அமைப்புகள், பத்திரிகைக்காரர்கள், நடிகர்கள் போன்ற யாரும் இதுவரை ஒருவர் மதத்தின் பெயரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு வாய் திறக்கவில்லை.

கொலை செய்யபட்டவர் இந்து என்பதால் அனைவரும் வாயை மூடி இருக்கிறார்களா எனவும், இதுதான் தமிழகத்தில் இந்துக்களின் நிலைமை எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் மன குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3937 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*