Connect with us

#24 Exclusive

என்ன நடக்கிறது டெல்லியில் கட்டுக்கடங்காத போராட்டம் . கொழுந்துவிட்டு எரியும் வடகிழக்கு டெல்லி முழு விவரம் !

கடந்த பல நாட்களாக டெல்லியின் முஜிபுர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று முஜிபுர் காவல் நிலையம் அருகே போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறையினர் கலைந்துசெல்ல கூறினார் ஆனால் அவர்கள் கலைந்துசெல்ல மறுத்தனர் .

அது முக்கிய சாலை என்பதால் சிறிதுநேரத்தில் மையில் கணக்கில் வாகனங்கள் தேங்கி நின்றது இறுதியில் வேறுவழியின்றி போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கலவரம் மூண்டது . போராட்டக்காரர்கள் தொடர்ந்து கற்களை வீசி காவல் துறையினரை தாக்கினர்

அதில் தலைமை காவலர் ரத்தன் லால் என்பவர் உயிரிழந்தார் . மேலும் பல காவலர்கள் காயமடைந்துள்ள நிலையில் . போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்தனர் . இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியுள்ள நிலையில் . மறுமுனையில் ஜப்ராபாட் பகுதியில் குடியுரிமை எதிர்ப்பு போரட்டம் நடத்திவந்தவர்களுக்கும் . குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது

Loading...

அதில் இரு தரப்பினரும் மாறிமாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் அந்த இடம் போர் களமாக காட்சியளிக்கிறது . இதனால் வடகிழக்கு டெல்லியின் 10 இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . அமெரிக்கா அதிபர் டிரம்ப் டெல்லி வந்துள்ள நிலையில் இந்த போராட்டம் மிக பெரிய தலைவலியாக மாறியுள்ளது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending