Connect with us

#24 Exclusive

CAA NPR NRC குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி ! மாணவர்கள் அந்த அரசியல் கட்சிகளிடம் பாதுகாப்பாக இருக்க அதிரடி கருத்து !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் மேலும் CAA NRC, NPR குறித்து கேள்வி எழுப்பிய போது, நாட்டிற்கு NPR நிச்சயம் தேவை எனவும் அப்போதுதான் உள்நாட்டினர் யார் வெளிநாட்டினர் யார் என கண்டறிய முடியும் எனவும் கூறினார், மேலும் CAA குறித்து சில அரசியல் கட்சிகள் தவறான தகவலை பரப்பு கின்றனர் அவர்களுக்கு மதம் குருக்களும் துணை போகின்றனர் என கூறியவர், இந்திய முஸ்லிங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களை வெளியேற்றமாட்டார்கள் அது அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்காக கிளப்பிவிடும் பொய் என்று கூறியுள்ளார், மேலும் அப்படி ஒன்று நடந்தால் தானே முதல் நபராக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார், மேலும் மாணவர்கள் அரசியல்வாதிகளிடம் தெளிவாக இருக்கவேண்டும் எனவும் அந்த அரசியல் கட்சிகள் தவறாக வழிநடத்தும் எனவும் பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவாக போராடுமாறும் அறிவுறுத்தினார்.

Loading...

NRC வரும் நிலையில் அதுகுறித்து வந்தபிறகு அறிந்து பிறகு கருத்து சொல்வதாக தெரிவித்துள்ளார், இந்நிலையில் தற்போது ரஜினி திமுகவை குறிவைத்து கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending