Connect with us

#24 Exclusive

CAA எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துறீங்க கேள்வி கேட்ட செய்தியாளர் மாணவிகள் சொன்ன பதிலால் தெறித்து ஓடிய பரிதாபம்?

மதுரை :- குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதுபோல் மதுரை கே. கே நகரில் மாணவர்கள் சார்பில் ஒரு குழுவினர் கத்தி கத்தி மத்திய அரசை படு ஆவேசமாக எதிர்த்து வந்தனர்.

இதனை பார்த்த செய்தியாளர் ஆக விபரம் தெரிந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் போல இவர்களை பேட்டி எடுத்தால் என்னவென்று முடிவெடுத்து போராட்டத்திலேயே வேகமாக கத்திய நால்வரை தேர்ந்தெடுத்து ஏன் இப்போது போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள் என ஒற்றை வார்த்தை கேட்டார். சாதாரணமாக ரிப்போர்ட்டரும் பெண்கள் விவரமாக பதில் சொல்வார்கள் என்று காத்திருந்தார்.

ஆனால் அவரே தெறித்து ஓடும் படி மாணவிகள் சொன்னார்களே ஒரு பதில் ஆமாம் சார் இங்க இருக்குற முஸ்லீம் மக்களை பாகிஸ்தான் விரட்ட போறாங்களாம் தெரியுமா? நாங்கள் எல்லாம் ஒட்டு உறவுமா இருக்கோம் எங்களுக்கு சட்டம் போட உத்தரவு போட யாரு இருக்கா என்று பேச ஒரு நிமிடம் ரிப்போர்ட்டர் ஆடிப்போயிருப்பார். ஆமாம் குடியுரிமை சட்ட திருத்தம் என்பதே, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது குறித்துதான்.

Loading...

இதில் இந்த நாடுகள் தங்களை முஸ்லீம் நாடுகள் என அறிவித்து கொண்டதால் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது என்னவென்று கூட தெரியாமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதாக யாரோ ஒருவர் கிளப்பிவிட அது கூட தெரியாமல் வருங்கால தூண்கள் என்று சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி வருகிறது.

Loading...

இனிமேலாவது என்ன ஏது என தெரிந்து கொண்டு போராடுங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர், இவர்களை பேட்டி எடுத்த ரிப்போர்ட்டர் நிலைமைதான் படு மோசம் என்றும் வேறு ஏதாவது கேள்வியை அவர் கேட்டிருந்தால் அதற்கும் மாணவிகள் ஒரு பதிலை சொல்லி ரிப்போர்ட்டரை தெறித்து ஓட செய்திருப்பார்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர், வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending