Connect with us

#24 Exclusive

ஒரே கடிதம் CAA விற்கு எதிரான வாக்கெடுப்பில் பின்வாங்கியது ஐரோப்பிய யூனியன் !

இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றபட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது, இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தது.

ஜனநாயக நாடான இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மற்றொரு அவை விவாதம் நடத்துவது சரியானதாக இருக்காது எனவும் தெரிவித்தது, மேலும் இதுகுறித்து இந்திய மக்களவை தலைவர் “ஓம் பிர்லா ” ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு எழுதிய கடிதத்தில், ஜனநாயகத்தின் மதிக்கும் நாடுகள் கொண்ட அமைப்பில் மற்றொரு ஜனநாயக நாடு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது முறையல்ல. இது ஒருசார்பாக எடுக்கும் முயற்சியாகும். இந்தியாவின் இறையாண்மைக்கும், எம்.பி.க்களின் உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்துவதற்கு ஐரோப்பிய யூனியனின் உள்ள பெரும்பாலான எம் பி கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது சரியில்லை எனவும் இதுபோல் இந்தியா சட்டம்கொண்டுவந்தால் என்ன நடக்கும் என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

Loading...

இந்த நிலையில் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பெரும்பாலான எம்பிக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சில எம்பிக்கள் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிராக பேசினர். மற்ற சிலர் நடுநிலை கருத்துகளை தெரிவித்தனர்.

Loading...

தற்போது ஐ நா சபையை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் தீர்மானத்தை ஒத்திவைத்துள்ளது, இதனால் இடதுசாரிய மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்துவந்த பல கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன, மோடி அரசு எடுக்கும் முயற்சிக்கு உலக நாடுகள் கூட எதிர்ப்பு தெரிவில்லையே என வேதனை அடைந்துள்ளனர். ஜனநாயக நாடான இந்தியாவின் நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது என ஒற்றை கடிதத்தின் மூலம் இடதுசாரிகள், பாகிஸ்தான் ஆதரவு நாடுகள் என அனைவருக்கும் ஆப்பு அடித்து விட்டது இந்தியா !

©TNNEWS24

Loading...

Trending