Connect with us

#24 Exclusive

கலைந்தது CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வேஷம் அமிட்ஷா அவசர அழைப்பு 8 கம்பெனி துணை இராணுவம் விரைவு.

டெல்லி :- தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இன்று வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் CAA எதிர்ப்பு குழுவினர் இரண்டு தரப்பினர் இடையே நடைபெற்ற வாக்கு வாதம் மோதலாக உருமாறியது.

திடீர் என CAA எதிர்ப்பு போராட்ட காரர்கள் கையில் பிடித்திருந்த தேசிய கொடி, கற்கள், செருப்புகளை கொண்டு காவலர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர் மேலும் CAA ஆதரவாளர்கள் இடையேயும் தாக்குதல் நடத்தப்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தாக்குதல் நடத்தி போராட்ட காரர்களை கலைத்தனர்.

அமெரிக்க அதிபர் இந்தியாவில் அரசு முறை பயணமாக தனது குழுவினருடன் இந்தியா வந்துள்ள நேரத்தில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கும் நிலையில் திட்டமிட்டு இந்தியாவின் பிம்பத்தை உலக நாடுகள் மத்தியில் வேறு விதமாக காட்ட கலவரக்காரர்கள் முயல்வதாக உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading...

உள்துறை அமைச்சர் அமிட்ஷா காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடன் எமெர்ஜென்சி கூட்டத்தை நடத்தினார், அதன் அடிப்படையில் 8 கம்பெனி துணை ராணுவப்படையினர் வடகிழக்கு டெல்லி நோக்கி அனுப்பி வைக்கப்படுவதாகவும், போராட்ட காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

இந்நிலையில் போராட்டக்காரர்கள் உருவாக்கிய கலவரத்தில் தலைமை காவலர் கொலைசெய்யப்பட்டது, தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதே தேசிய கொடியுடன் காவலர்கள் நோக்கி தாக்குதல் நடத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கலவரக்காரர்களின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டு விட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்துகின்றனர், அதே நேரம் தற்போது 8 கம்பெனி துணை இராணுவத்தை கலவரம் உண்டான இடத்திற்கு அனுப்பியிருப்பது இரவிற்குள் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending