Connect with us

#24 Exclusive

நாங்க CAA எதிரா போராட்டம் நடத்துறோம் கடைய சாத்து ! நான் இந்தியன் டா மிளகாய் பொடியை வீசி 100 பேரை விரட்டி அடித்த கணவன் மனைவி வைரலாகும் வீடியோ

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதனை அடுத்து பலர் வழிநெடுகிலும் உள்ள கடைகளை மூட எச்சரிக்கை விடுத்து வந்தனர், அதுபோல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தங்களது கடையை திறந்த போது நாங்கள் CAA, NRC, NPR ஆகியவற்றை எதிர்க்கிறோம் நீங்களும் கடையை அடையுங்கள் என மிரட்டியுள்ளனர்,

மேலும் அவரது கடையை தாக்கியுள்ளனர் இதனால் கடுப்பான கணவன் மனைவி இருவரும் மிளகாய் பொடியை எடுத்து, கூடி இருந்த கூட்டத்தினரை நோக்கி நான் இந்தியன் நான் கடையை மூடவேண்டுமா என கலவரக்காரர்களை நோக்கி வீச கூடி இருந்தவர்கள் ஓட தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறியது “எப்போதும்போல, நான் காலை 9 மணிக்கு எனது கடையைத் திறந்தேன். சிலர் வந்து அதை மூடச் சொன்னார்கள். நான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.சி.ஏ) ஆதரிக்கிறேன் என்று சொன்னேன், பிறகு நான் ஏன் என் கடையை மூட வேண்டும் என கேட்டேன் மேலும் நான் இந்தியன் எனவும் கூறினேன் அவர்கள் என் கடையை தாக்கினர் . எனவே நாங்கள் அவர்களை விரட்டினோம் என கூறினார்

Loading...

சிறிது நேரம் கழித்து, போலீசார் பிடிக்க முயன்றதும் அவர்கள் ஓடிவிட்டனர் என்று “கிஷோர் பொட்டார் “கூறினார். எதிர்ப்பாளர்கள் யவத்மாலில் உள்ள மேலும் வியாபாரிகளின் கடைகளையும் மூட முயன்றனர். வர்த்தகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடி தங்கள் மறுப்பைக் காட்டினர். பின்னர், வர்த்தகர்கள் ஒரு அணிவகுப்பை மேற்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களால் மூடப்பட்டிருந்த கடைகளைத் திறந்து வைத்தனர்.

Loading...

CAA விற்கு எதிராக கோலம்போட்டதை விடிய விடிய விவாதம் நடத்திய தமிழக ஊடகங்கள் மிளகாய் பொடியை எடுத்து கணவன் மனைவி இருவரும் ஒரு கூட்டத்தை ஓடவிட்டு நான் CAA – வை ஆதரிக்கிறேன் என்று கூறியதை பற்றி வாய் திறக்கவில்லை. இதுபோன்ற தகவலை பகிர்ந்து எங்கள் செய்திகள் பலரை சென்றடைய உதவவும்.

Loading...

Trending