Connect with us

Uncategorized

CAA விழிப்புணர்வு பேரணியில் புகுந்து தகராறு செய்த திமுகவினர் ஓட ஓட விரட்டி அடிப்பு ! கடைசியில் சொன்ன 200 ரூபாய் வசனம்தான் இப்போ வைரல்

சென்னை :- சென்னை பல்லாவரம் தற்போது இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மாறிவருகிறது, இங்குதான் நேற்று அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்பு பேரணி நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் கூறினார்.

அதன் எதிரொலியாக ஒவ்வொரு பகுதியில் பொதுக்கூட்டம், பேரணி, தெருமுனை கூட்டம், ஊர்கூட்டம் உள்ளிட்ட பலவற்றிற்கு பாஜக ஏற்பாடு செய்து நடத்தி வந்தது, அதுபோல் சுமார் 100 பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழுப்புணர்வு கூட்டம் சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்துள்ளது, காவல்துறை அனுமதியுடன் நடந்த பேரணியில் திமுகவினர் இடையே புகுந்து மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி முதலில் கூட்டத்தை நிறுத்து என விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு கூட்டத்தை நிறுத்தவில்லை என்றால் கட்சி காரனை கூட்டி வந்து உங்கள் எல்லாரையும் கைமா (கொலை ) செய்துவிடுவேன் என அவர்கள் மிரட்ட கூடி இருந்தவர்கள் அவர்களை இனியும் பொறுத்தால் போதாது என ஓட ஓட விரட்டி அடித்தனர், அதிலும் குறிப்பாக 200 ரூபாய் கூலிக்கு வேலை செய்யும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்த காசில் கூட்டம் நடத்தும் எங்களுக்கு எப்படி இருக்கும் என கூறி அவர்கள் விரட்டி அடித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக நிர்வாகி கேசவ சிதம்பரம் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு நண்பர்களுக்கு வணக்கம். இன்று (25/01/2020) மாலை சென்னை கீழ்கட்டளை பேருந்துநிலையம் அருகில் பல்லாவரம் பாஜக வடக்கு நகரம் சார்பாக குடியுரிமை சட்ட ஆதரவு தெருமுனைகூட்டம் நடத்தினோம்.

Loading...

நகர தலைவர் ஆனந்தன் அவர்கள் மாவட்ட துணைதலைவர் பாலாஜி மாவட்ட பிரச்சாரஅணி தலைவர் ஏஎஸ் வெங்கடேசன் வைரம் சீனிவாசன் மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாநில சிறுபான்மையினரணி தலைவர் திரு. ஆசிம்பாஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த பரம்பரை அடிமைகள், இன்பநிதியின் டயபரை கழுவி தீர்த்தமாக குடிக்கும் அடிமைகள் பத்துபேர்வரை வந்து இடைபுகுந்து நீவந்து இங்குவந்து எப்படி கூட்டம்போட்டு பேசலாம்? ங்கோ……..எங்கவந்து என்னபேசறன்னு தகராறுசெய்து பிரச்சனை செய்தனர். இவர்கள்தான் ஜனநாயகம்பற்றி மற்றவர்களுக்கு பாடமெடுக்கிறார்கள். வீடியோ இணைத்துள்ளேன்.

நமதுஆட்கள் அவர்களை அடிக்கும்முன்பாக காவல்துறையினர் வந்து தலையிட்டு அவர்களை இழுத்துச்சென்றனர். இத்தனைக்கும் திமுகவை தாக்கிபேசும் பழக்கம் இருந்தாலும் இன்று குடியுரிமை சட்டம் சம்பந்தமாகவே கூட்டம் நடந்துவந்தது. இது எந்தபத்திரிக்கையிலும் வராது. காரணம் நாம் பணம்கொடுத்து எந்த பத்திரிக்கையையும் அழைப்பதில்லை.

கூட்டமே கட்சியினர் கைகாசு போட்டுத்தான் நடத்துகிறோம். இன்றைய பட்ஜெட் ரூபாய் 20000/_ அனைத்தும் கட்சியினர் செலவு. கரண்ட் திருடறதில்லை. யாரிடமும் கேட்காமல் ஜெனரேட்டர் வாடகைக்கு வைத்து கூட்டம் நடத்துகிறோம். எனதுசெலவு ஆயிரம் ரூபாய். அப்படியே மற்றவர்களும் தங்களால் முடிந்ததை தருவார்கள். இதுஒன்றும் ரகசியம் இல்லை. பொதுவில்தான் கூறுகின்றேன். இப்படித்தான் கடந்த 25 ஆண்டுகளாக கட்சிவேலை செய்துவருகின்றோம். உணர்வுக்கு மதிப்பளித்து.
கூலிக்கு மாரடிக்கும் இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் கைக்காசைபோட்டு செலவுசெய்யும் நமக்கு எவ்வளவு இருக்கும்?

ஆனால், இது எங்களுக்கு புதிதில்லை. இருபது ஆண்டுகளுக்குமுன்பே இதேஇடத்தில் நான் மைக்பிடித்து பேசியபின் என்னை அடிக்க இருபதுபேர் திரண்டனர் என்பது என்பழைய மலரும்நினைவில் உள்ளது. யாமார்க்கும் குடியல்லோம். யமனைஅஞ்சோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்படின்னா இப்ப கேக்கணுமா?
இவர்களது லட்சணம் வெளியில்தெரிய பகிருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் சொன்ன 200 ரூபாய் வாங்குகிற உங்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் சொந்த காசில் கூட்டம் நடத்தும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று சொல்லி விரட்டி அடித்த வசனம்தான் தற்போது வைரலாகி வருகிறது. ( வீடியோ கீழே )

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending