CAA விற்கு எதிராக கையெழுத்து வாங்க போன திமுகவினருக்கு ஏற்பட்ட சோகம் ! இனி கனவில் கூட செல்லமாட்டார்கள் !!

சென்னை :- CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என காணப்படும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் CAA விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார், இந்நிலையில் தனது கட்சி தொண்டர்களுக்கு CAA விற்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவேண்டும் என உத்தரவிட்டார், இதற்கான முதல் கையெழுத்தை அவரே தொடங்கி வைத்தார், மேலும் அவரது கூட்டணி கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வருகின்றனர்.

Loading...

தமிழகத்தில் பல பகுதிகளில் CAA என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் திமுகவினர் மோடி இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப போவதாக கூறி கையெழுத்து வாங்கப்படுவதாகவும், இன்னும் ஒரு சில இடங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர என கூறியும், ஊர் பிரச்சனைகளை கூறி கையெழுத்து வாங்குவதாகவும் குற்றசாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில்தான் திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி நெடுசெழியன் என்பவர் சாலையில் உள்ள மக்களிடம் கையெழுத்து வாங்க சென்றார், பலரிடம் CAA என்றால் என்னவென்றே கூறாமல் கையெழுத்து வாங்கிய நிலையில் ஒருவர் எதற்காக கையெழுத்து வாங்குகிறீர்கள் என கேட்க நம்மை எல்லாம் இந்த ஊருல இருக்கவிடாம பண்ண பார்க்கிறார்கள் என்ற பொய் கருத்தை கூறினார்.

Loading...

அதன் பிறகு NRC என்றால் என்ன என கேட்க பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை நாட்டில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை இல்லை என அடுத்த பொய்யை எடுத்துவிட்டார், அப்போது குறுக்கிட்ட கேள்வி எழுப்பியவர் எனக்கு குடியுரிமை சட்டம் என்றால் என்னவென்று தெரியும் நீங்கள் ஓடுங்கள் என விரட்டி விட்டார், அதனை அடுத்து அந்த இருவரும் அங்கிருந்து செல்கின்றனர்.

தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தமிழர்கள் இடையே வெளிப்படுவது திமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மற்றவர்கள் சொல்வதுபோல இஸ்லாமியர்கள் ஓட்டிற்கு ஆசைப்பட்டு எங்கே தமிழர்களின் வாக்குகளை இழக்க போகிறோமோ என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலே சென்று இராமநாதபுரம் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் திமுகவினர் விரட்டி அடிக்கப்படும் சம்பவங்களும், பாகிஸ்தான் காரன் இங்க வர கையெழுத்து இயக்கம் நடத்துகிற ஒரே இந்திய கட்சி திமுகதான் எனவும் திமுக தமிழ்நாட்டு கட்சியா இல்லை பாகிஸ்தான் கட்சியா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர், மேலும் ரவீந்திரநாத் குமார் வாகனம் தாக்கப்பட்ட நிலையில் அவரது சொந்த சமூகமான முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிக அளவில் CAA விற்கு ஆதரவாக திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் CAA விற்கு எதிராக கையெழுத்து கேட்டு செல்லும் திமுகவினர் விரட்டி அடிக்கப்படுவார்கள் என கனவிலும் அவர்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*