வாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா? வெளியில் வந்து மமதா சொன்னது என்ன?

வாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா? வெளியில் வந்து மமதா சொன்னது என்ன?

Loading...

டெல்லி.,

மேற்குவங்க முதல்வர் மமதா பானெர்ஜீ இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பூக்கொத்துகள் கொடுத்து வாழ்த்தியதுடன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேசிய பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார் என்ற அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்தன.

Loading...

ஆனால் கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராசிவ்குமார் சாராத சிட்பண்ட் வழக்கில் கைதாக இருப்பதால் பல உண்மைகள் வெளியாகும் என்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ குழுவிற்கு தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களை கைது செய்வது ஒன்றும் இயலாத காரியமில்லை என்பதனை உணர்ந்த இரும்பு பெண் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல தூது விட்டதாகவே தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அமிட்ஷா, யோகி ஆகியோரை வரவிடாமல் மம்தா பல்வேறு தடைகளை விதித்தார் ஆனால் இன்று பம்மி தானாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் மமதா இதனால் பாஜக தொண்டர்கள் வகையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

கோரிக்கை வைத்த மமதா பானெர்ஜியிடம் அமிட்ஷா எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடமென்று தெளிவாக சொல்லிவிட்டதாகவும், விரைவில் நாடு முழுவதும் வெளிநாட்டவரை வெளியேற்றும் பணி தொடங்கி இருப்பதாகவும் அமிட்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

அத்துடன் இனி இந்தியாவில் பொருளாதார குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் நேருக்கு நேர் அமிட்ஷா சொல்லியதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் வெளியில் வந்த மமதா தேசிய மக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது?

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*