Connect with us

#24 Exclusive

அட கடவுளே புவனேஸ்வர் குமாருக்கா இப்படி ! கேள்விக்குறியாகும் புவனேஸ்வரின் கிரிக்கெட் வாழ்க்கை !

இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்களுள் ஒருவர் புவனேஸ்வர் குமார் . இவர் துவக்கம் , இறுதிக்கட்டம் என இரண்டிலும் சிறப்பாக பந்துவீசும் திறன்பெற்றவர் . இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் புவனேஸ்வர் குமார் .

இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்துள்ளது பிசிசிஐ விதியின்படி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார் . அதில் மருத்துவர்கள் புவனேஸ்வருக்கு பல கட்ட சோதனை செய்து அவருக்கு இருப்பது சாதாரண வயிற்றுவலி என்று கூறியுள்ளனர்

அதனால் அவர் மேற்கிந்திய தீவுகள் எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பெற்றார் . ஆனால் இடையில் அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் தொடரிலிருந்து பாதியில் வெளியேறி மருத்துவ பரிசோதனைக்காக சென்றார் அங்கு அவரை மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் இறங்கியிருப்பதை கண்டறிந்தனர் .

Loading...

இதனால் புவனேஸ்வர் குமார் அடுத்த ஓராண்டிற்கு எந்த போட்டியிலும் பங்கேற்கமாட்டார் . அதன் பின்னர் அவரது உடல் முழு தகுதியடைந்தால் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது . இந்த காலத்தில் வேறு யாரேனும் அவரது இடத்தை நிரப்பிவிட்டால் புவனேஸ்வரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி தான் .

Loading...

ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதிராபாத் அணிக்காக விளையாடும் புவனேஸ்வர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது . இது புவனேஸ்வர் குமார் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது .

இது ஒருபுறம் இருக்க இத்தனை நவீன தொழில்நுட்பம் இருந்தும் ஏன் இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கவில்லை என்று தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பிசிசிஐ கேள்வியெழுப்பியுள்ளது . ரவி சாஸ்திரியும் தனது பங்கிற்கு பிசிசிஐ யில் கேள்வியெழுப்பியுள்ளதால் விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளது .

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending