பேருந்து நிலையத்தில் CAA விற்கு அர்த்தம் கேட்டு திமுகவினரை விரட்டி அடித்த மக்கள் வைரலாகும் வீடியோ ! அவர் சொல்லிய வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது !

சென்னை :- CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என காணப்படும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் CAA விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார், இந்நிலையில் தனது கட்சி தொண்டர்களுக்கு CAA விற்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவேண்டும் என உத்தரவிட்டார், இதற்கான முதல் கையெழுத்தை அவரே தொடங்கி வைத்தார், மேலும் அவரது கூட்டணி கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வருகின்றனர்.

Loading...

தமிழகத்தில் பல பகுதிகளில் CAA என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் திமுகவினர் மோடி இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப போவதாக கூறி கையெழுத்து வாங்கப்படுவதாகவும், CAA விற்கு விளக்கம் தெரியாமலேயே மக்களிடம் கையெழுத்து வாங்குவதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன, இந்நிலையில் பேருந்து நிலையத்தில் சென்று பொதுமக்கள் ஒருவரிடம் திமுகவினர் கையெழுத்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் CAA என்றால் என்னவென்று பதிலுக்கு கேள்வி எழுப்ப பதில் சொல்லமுடியாமல் அவர்கள் ஓடிவிட்டனர் இதனையடுத்து, திமுக நாட்டினை பாகிஸ்தானுக்கு விற்க முயலுவதாக அவர் கோசம் எழுப்பியதுடன் திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா பயன்படுத்திய மானம்கெட்ட என்றவார்த்தையை பயன்படுத்தி திமுகவினரை விரட்டியுள்ளார்.

Loading...

தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் பாக்கிஸ்தான் காரனுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் செயல்படுகிறதா என கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றன, ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் திமுகவினர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த பெரும்பான்மை இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கவில்லை என போராடுவது தமிழர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் வெளிப்பாடுதான் இந்த வீடியோ எனவும் தனி மனிதராக திமுகவினரை விரட்டி அடித்தவருக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*