Connect with us

#24 Exclusive

புர்கா அணிய அதிரடி தடை முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி. நாட்டு நலனுக்காக எடுப்பதாக அறிவிப்பு

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய அந்நாட்டு பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது, இதனை அடுத்து மார்ச் மாதம் இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் பண்டிகையில் போது இலங்கையின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது, கிறிஸ்தவ ஆலயங்கள் குண்டு வைத்து தாக்க பட்டன பல இடங்களில் மரண ஓலங்கள் கேட்டன, உலகமே அதிர்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து நாட்டில் இருதரப்பினர் இடையே கலவரம் உண்டானது, இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லீம் அமைப்புகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது, மேலும் புர்கா அணிந்து பல இடங்களின் குண்டு வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து அப்போது புர்கா அணிய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

Loading...

இதனையடுத்து நாடாளுமன்ற குழு இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய நிரந்தரமாக தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் நாட்டு நலனுக்காக எடுக்கும் முடிவில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Loading...

நாடாளுமன்ற குழு பரிந்துரையை இலங்கையை சேர்ந்த கிறிஸ்துவ அமைப்புகள் வரவேற்று உடனடியாக தடை உத்தரவு நிரந்தரமாக அமலாக வேண்டும் என்றும் அதன் தலைவர் சாமுவேல் கடிதம் எழுதியிருக்கிறார்.

©TNNEWS24

Loading...

Trending