இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தனது துருப்புகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு !!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தனது துருப்புகளுக்கு பிறப்பித்துள்ள  உத்தரவு !!

ஈராக் நாட்டில் பல்வேறு இடங்களில் பிரித்தானிய வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் ஈராக்கிய படைகளுக்கு பயிற்சி அளிப்பது, பிரித்தானிய இடங்களை பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்க ராணுவம் ஈரானிய ராணுவ தளபதி ஒருவரை தாக்கி கொன்றுள்ளது இதற்கு பழிவாங்குவோம் என ஈரானும் அறிவித்துள்ளது உலக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள தனது நாட்டு வீரர்களை விழிப்புடன் செயல்படவும், எந்த சூழலையும் சந்திக்க முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Loading...

மேலும் ஈராக்கில் உள்ள மேற்கு நாடுகளை சேர்ந்த மக்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிலைமை மோசமானால் நிச்சயமாக மத்திய கிழக்கில் உலக அரசியலையும், வர்த்தகத்தையும் ஸ்தம்பித்து போக செய்யும் அளவிலான ஒரு பெரும் போர் நிகழலாம் ஆனால் அது மூன்றாவது உலக மகா யுத்தமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Loading...
Loading...

Mukilvani Senthivel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *