#BREAKING இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்டால் வாழ்நாள் தடை !! ஊடக கொள்கை 2020 அதிரடி மாற்றம் ! இனி உளவுத்துறை கிளியரன்ஸ் பெறவேண்டும் !

மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றத்தில் இருந்து இந்தியாவிற்கு எதிராக வெளிநாடு மற்றும் நாட்டிற்கு உள்ளே இருந்து செயல்படும் தேசவிரோத சக்திகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Loading...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல்வேறு நடவடிக்கைகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியது, அதன் முதல் படியாக யாரும் எதிர்பாராத விதமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியத்துடன் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இது இந்திய வரலாற்றில் மிக பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது, இந்த சூழலில் இந்தியாவிற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக சில ஊடகங்கள் இருப்பதும் அளவுக்கு அதிகமான ஊடக சுதந்திரம் மூலம் தேச விரோத கருத்துக்களை ஊக்குவிப்பதும், இந்தியாவிற்கு எதிரான சிந்தனை கொண்டவர்களை வளர்க்கும் விதமாக ஊடகங்கள் செயல்பட்டது தெரியவந்தது.

Loading...

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய ஊடக கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது, இந்நிலையில் அதனை இந்தியாவில் பல போலி செய்திகள் பரவ காரணமாக இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து செயல்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மிர் அறிவித்திருக்கும் புதிய ஊடக பாலிசியை பார்த்தால் தமிழகத்தில் உள்ள சில ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி அடைவார்கள் ஜம்மு காஷ்மிர் ஊடகங்கள் ஏற்கனவே கதறி வருகின்றன இந்த புதிய ஊடக கொள்கை பற்றி. ஜூன் 10 வெளிவந்த இந்த புதிய கொள்கையின் படி, “அரசு விளம்பரங்கள்” பெற தகுதிக்கு, ஊடகங்களின் எடிட்டர்கள், நிருபர்கள், முக்கிய அலுவலர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் பின்புலம் (background check) விசாரிக்கப்படுவார்கள். நிருபர்கள் குறிப்பாக உளவுத்துறையின் security clearance பெற வேண்டும்.

மேலும், போலி செய்திகள், தேச விரோத செய்திகள், முறையற்ற செய்திகள், மத நல்லினக்கத்தை கெடுக்கும் செய்திகள் – போன்றவற்றை முடிவெடுத்து, அந்த செய்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மிர் நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்குகிறது இந்த புதிய கொள்கை.

இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் சம்பந்தப்பட்ட செய்திகளை, ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலிருந்து வெளியிட்டாலும் – எடுத்துக்காட்டு: ஜம்மு காஷ்மீர் பற்றி போலி செய்தியை சென்னையில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டாலும் – அவர்கள் மீது ஜம்மு காஷ்மிர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

குறிப்பு: ‘அரசு அதிகாரிகளுக்கு அதீத அதிகாரம் தரும் கொள்கை இது’ என்று ஊடகத்துறையினர் இந்த கொள்கை நாடுமுழுவதும் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது மத்திய அரசிற்குதான் தெரியும் என்றாலும், ஊடகங்கள் கதறுகின்றன..

இது இப்படியிருக்க, மத்திய அரசு நாடு முழுவதற்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் புதிய ஊடக கொள்கை ஒன்றை ஏற்படுத்தி வருவதாகவும் . ஆகஸ்ட் – செப்டம்பரில் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

source – https://indianexpress.com/article/india/new-media-policy-for-ut-jk-officials-to-rule-on-fake-news-take-legal-action-6451379/

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*